முரண் - சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கற்பழிப்பு.
கடந்தேன்
ஒரு போராட்டம்.
கடந்தேன்
ஒர் அராஜகம்.
கடந்தேன்.
கண்டதையும் கடந்தேன்
கண்ட கண்டதையும் கடந்தேன்.
வெகு கோபத்தோடு
கடந்தப்பின்பு தட்டிக்கேட்டு
கண்டன அறிக்கையிடுகிறேன்
”மனச்சாட்சி இல்லையா
மனிதர்களே ? “ என்று .
அப்படியென்றால்
நான் யார் ?
தாளில் எழுதி எழுதி
கிழித்துக்கொண்டிருக்கும்
ஓர் எழுத்தாளன்..!
-இரா.சந்தோஷ் குமார்