திவ்யாவின் உண்மைக்காதல்----ப்ரியா
திவ்யாவும், அஜினும் நெருங்கிய நண்பர்கள்.இருகுடும்பங்களும் வசதி படைத்தவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படித்துக்கொண்டிருக்கின்றனர். பன்னிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளி ஒரே டியூசன் பக்கத்து பக்கத்துவீடு.... எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள் இவளுக்கு என்ன உதவி என்றாலும் அவன் செய்து கொடுப்பது வழக்கம் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதும் இவர்கள் பெற்றோரும் இவர்கள் விருப்பப்படி ஒரே கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் படிக்கும் போதே இருவரும் ஒரே பைக்கில் செல்வது வழக்கம் இப்பொழுதும் கல்லூரிக்கும் இதேநிலைதான்.
படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இருவரும் ஒன்றாகவே இருந்து வந்தனர்.
அனைத்து விஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர்....இருவருக்குள்ளும் ஒளிவு,மறைவு என்பதே கிடையாது.
கல்லூரியில் இவர்களை தனித்தனியாக யாரும் பார்க்கவே முடியாது இணைபிரியா நண்பர்களே.....ஆண்பெண் என்ற பாகுபாடின்றி இருவரும் பழகி வருவது கல்லூரியில் அனைவருக்கும் அதாவது உடன் படிக்கும் மாணவர்கள் முதல் பேராசியர்கள் வரை அனைவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது.
உடலும் உயிருபோல இருவரும் இருக்க.......
சிலர் இவர்களை காதலர்கள் என்று சொல்லி கிண்டலடிப்பதும் வழக்கமே ஆனால் இவர்கள் எந்த பேச்சுக்களையும் கண்டுகொள்வதில்லை.
அவளுக்கு உடம்பு சரி இல்லன்னா இவன் துடிச்சிப்போயிருவான் இவனுக்கு உடம்பு சரி இல்லன்னா அவ துடிச்சிப்போயிருவா........இருவரில் யாராவது ஒரு ஆளுக்கு உடம்புக்கு முடியாம விடுமுறை எடுத்தாலும் இருவருக்குமே அந்த விடுமுறை பொருந்தும்.
பெற்றோர் கவனிக்கிறாங்களோ இல்லியோ இவங்க ஒருத்தொரையொருத்தர் நல்லா கவனிச்சிப்பாங்க அப்டி அன்பாய் இருந்து வந்தனர் இந்த அன்புப்பறவைகள் திவ்யாஅஜின்.......இப்படி அழகாய் நாட்கள் பறந்து கொண்டிருக்க.......
கொஞ்சநாட்களாகவே திவ்யாவிடம் ஒருவித மாற்றம் இருப்பதை அவள் பார்வையாலும் செயல்களாலும் அறிந்து கொண்டான் அஜின் ஆனால் அவளோ இவன் என்ன என்று எவ்வளவு கேட்டும் சொல்லவில்லை......அவள் இப்பொழுது சில நாட்களாக இவன் கண்களைப்பார்த்து பேசுவதுமில்லை........அவளிடம் ஏன் இந்த மாற்றம்? கேட்டாலும் சொல்லமாட்டேங்குறா? எப்படி கண்டுபுடிக்கிறது என்று குழம்பியிருந்தான் அஜின்.
இப்பொழுது கல்லூரி இறுதி ஆண்டில் இருவரும் படிக்கின்றனர்.அன்று சனிக்கிழமை திவ்யாவுக்கு பிறந்தநாள் என்பதால் இருவரும் காரில் அவளது இஷ்டகோவிலான பெருமாள் கோவிலுக்கு சென்றனர்........அன்று அவள் புடவையில் தலை நிறைய பூவுடன் பெருமாளை தரிசித்துவிட்டு இவன் அருகில் வர.......அவளது பார்வையும் எண்ணமும் இப்பொழுது சற்று புரிய ஆரம்பித்தது அஜினுக்கு......ஆனால் இவன் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல் புடவையை வைத்து கிண்டல் பண்ணிட்டிருந்தான் ஆனால் அவளோ சீரியசாக எதையோ நினைத்துக்குழம்பிக்கொண்டிருந்தாள்.......
வா போலாம் என்று அவன் அழைக்க.......இருவரும் காரில் பேசிக்கொண்டேசென்றனர்.அப்போது திவ்யா ஒரு அழகான க்ரீடிங் கார்டுடன் ஒரு காதல் கடிதத்தையும் நீட்டுகிறாள்......???
அதை சற்றும் எதிர் பார்க்காத அஜின் அதிர்ச்சியுடன் கோவமாய் அவளை பார்த்து.......
"நீ இப்படி இருப்பாய் என்று கொஞ்சம் கூட நான் எதிர் பார்க்கல உண்மையான நட்புக்கு அர்த்தம் தெரியாமதான் இவ்ளோ நாள் என்கூட பழகிட்டு இருந்தியா? ச்சே....கேவலமா இருக்குது உன்ன நினைக்கும் போது....இவ்ளோ கேவலமா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல இனிமேல் தயவு செய்து என் முகத்துலயே முழிக்காத" என்று அவளை ரொம்ப திட்டி..... காரை விட்டு கீழே இறங்கு என்று சொல்லி இறக்கி விட்டுவிட்டான்........
அவன் அப்படியே சோகமாக இருக்க, அவள் ரோட்டில் அவன் நினைவிலும் அவனது வார்த்தைகளாலும் கண்ணீருடன் தடுமாற்றத்துடன் கால்கள் செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாள்..........
கவனம் சிதைந்து அவள் செல்ல கார் கண்ணாடி வழியே வெறித்து அவளை நோக்கிக்கொண்டிருந்தான் அஜின் அப்பொழுது எதிரே படு வேகத்துடன் வந்த லாரி அவள் மேல் மோதி அடிபட்டு உடல் நசுங்கிய நிலையில் அவள் கிடக்க....திவ்யா என்று கத்திக்கொண்டே அவன் அவளது சிதைந்த உடலை வாரிக்கொண்டு அழுதான் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரை இழந்துவிட்டாள் திவ்யா.......சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவளது உடலை அள்ளிச்சென்றது.....உடன் சென்று பார்க்க மனமின்றி வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு வந்து காரில் அமர்ந்து கொண்டான் அஜின்.......
என்னால் தானே அவள் இப்படி ஆனாள் என்று வாயால் பலமுறை சொல்லி சொல்லி கதறி அழுதான் அஜின் ..........
கண்ணிமைக்கும் நேரத்தில் என்னென்னவோ நடந்து போனதை எண்ணி நினைத்து நினைத்து துடித்துப்போனான்......காரில் அவள் அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த இருக்கையில் தொட்டுப்பார்க்கிறான் அவள் எழுதிய அந்த கடிதமும் அந்த கிரீட்டிங் கார்டும் அசைந்து கொண்டிருந்தது.
அதை எடுத்து படித்த அவனுக்கு மேலும் துக்கம் அதிகரித்தது
அதில் இறுதியில் எழுதப்பட்டிருந்த காதல் வரிகள்(வலிகள்)..........
"நீ என்னை விட்டு பிரியும் போது
நான் இறந்திருப்பேன்"
"நான் உன்னை பிரியும் போது
இந்த உலகில் உயிருடன் இருக்கமாட்டேன்"
இப்போது இவன் அவளுக்கு கொடுக்கும் பதில் காதல் கடிதம் கண்ணீர் துளிகள் மட்டுமே.........