புரியாமலே-----முதல் சிறுகதை

பனிப்புகார் விலகாத காலை வேளையிலே பாரிஸ் தெருக்கள்
பரபரப்பு குறையாமல் அசைந்துகொண்டிருந்தது மெட்ரோ ரயிலுக்காய் காத்திருந்த முகிலன் மனதில் வழமைக்கு மாறாக குழப்பம் நிறைந்திருந்தது
எப்படியாவது அவளிடம் தன் விருப்பத்தை கேட்டுவிடவேண்டும் என்ற எண்ணம் முகரேகைகளில் வெளிப்பட்டு கொண்டிருந்தது
வந்த தொடர் வண்டியில்
ஏறிய அவன் பெயர்கூட தெரியாத அவள் இருப்பதை கண்டு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்
அவள் கைத்தொலைபேசியில் candy crash விளையாடியதை பார்த்து
அவன்
ஹல்லோ மேடம் ..
திரும்பிய அவளை பார்த்து
தமிழா நீங்க ..
ம்..
உங்ககிட்ட ரெண்டு மினுசம் நோ .ரெண்டு நிமிஷம் பேசலாமா ..என சிக்கியது வாய்

எதோ புரிந்தவள் போல்
...எதபற்றி ..என புருவம் நிமிர்த்தினாள்
என்னோட எதிர்காலம் பற்றி என்னோட வாழ்க்கையை பற்றி
ஹல்லோ யார் சார் நீங்க ?
உங்கள் எதிர்காலம் பற்றி என்னோட
என்ன பேச்சு ?
என்ன லவ் வா?
உங்களுக்கு வேற வேலையில்ல ?
இல்லங்க ..நா...என தொடங்குமுன்னே அவள் தொடர்ந்தாள்
காலையிலே வந்து.. ச்சா...
என அவள் புகைந்த போது
மேடம் ...மேடம் அது இல்லங்க ..
என அவள் பேச்சை அமத்தி அவன் தொடந்தான்
'நீங்க போஸ்ட் ஒபிஸில வேலைசெய்யிறிங்க"
.....ம் ....
நான் பிரான்சுக்கு வந்து ஒரு வருஷம்
தாங்க வேலை இல்லங்க ..
.....நீங்க போன்ல பேசும் போது உங்க
ஆபிஸ்ல கிளீன் பண்ற வேலைக்கு ஆள் தேவையென்று சொன்னிங்க ..
அதைப்பற்றி பேசத்தான் வந்தேன் ...
என்றபோது ..
ஒ ....சாரி ..தப்பா நெனச்சிட்டன் ...சாரி
ஆ ..ஆ இருக்கு வேலை
உங்க போன் நம்பற கொடுங்க அடிக்கிறன்...என்று வாங்கி பதிந்து கொண்டாள் தொலைபேசி எண்ணையும்
அவன் முகத்தை தன் எண்ணத்திலும்

"ஆமா உங்க பெயர் என்னங்க "
"தமிழ் ..தமிழ்விழி "
"ரொம்ப நல்லா பேசுறிங்க பேருக்கு
ஏற்ற மாதிரி "என்று சிரித்துக்கொண்டே நகர்ந்தான்
அவன் சொல்லவந்தது எதோ சொல்லிவிட்டது எதோ இருப்பினும் மகிழ்ச்சி அவன் முகத்தில் .

எழுதியவர் : இணுவை லெனின் (8-Jan-15, 5:21 am)
Tanglish : puriyaamale
பார்வை : 283

மேலே