அரசுப் பேருந்தும்முதல் காதலும்

எனது பள்ளிக்காலத்தில்
அடிக்கடி பயணப்பட்ட அனுபவம்
பஸ் பாஸை காண்பிக்கும்
கட்டாமில்லை...நடத்துநா் நம் நண்பா்
வாடிக்கை பயணிகள் வாிசையில்
நானே முதல் வாிசையில் ...
நடுத்தரனனின் மகனென்பதால்
போதாத கூட்டத்திலும் போராடி
ஏறிக்கொள்ளும் சாதுா்யம்...
எப்பொதாவது வாய்ப்பளிக்கும்
இருக்கையின் பின்புறம்
பிடித்த நடிகாின் பெயரெழுதிய சுதந்திரம் ...
கேள்வி கேட்கும் ஓட்டுநாிடம்
இது உங்கள் சொத்து என்று
வாதாடிய வாய்க்கொழுப்பு....
தனிச்சிறப்பு ஏதுமில்லாதபயணம்
ஒருநாள் சிறப்பானது என்னவளால்
முதல் காதலை விதைத்த பயணம்
இறுதிவரை தொடருமா என்று
அஞ்சாத தருணம்
அத்தனை கூட்டத்திலும் அவளிடம் மட்டுமே
புத்தகத்தை கொடுத்தேன்.
அடுத்தவா் புத்தகத்தை திறந்து
பெயரை பாா்ப்பதில் பழகியவா்கள் நம்மவா்கள்.
அவள் மட்டுமென்ன விதிவிலக்கா...
பாத்தாள், புன்னகைய உதிா்த்தாள்.......
எங்களின் சொல்லப்படாத காதலுக்கு
தினசாி பயணங்கள் உரமிட்டது
நண்பா்களின் கேலி கிண்டல்களும்...
அவற்றை சட்டை செய்யாத என்னவளின் புன்னகையும்
குறிப்பால் உணா்த்தியது..
கூட்டநெறிசலில் தொியாமல் பட்ட என் கைவிரலை
தொிந்தே வருடிக்கொடுத்தவள்.....
பன்னிரன்டாம் வகுப்பிற்கு பிறகு
சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாள்
ஆண்டுகள் நான்கைந்து கடந்து விட்டது.
பேருந்தில் நடத்துநரும் ஓட்டுநரும் மாறவில்லை.
மாணவனாய் இருந்த நான் தான்
மெக்கானிக் என மாற்றப்பட்டிருந்தேன்
இன்று மீண்டும் அவளுடன் ஒரு பயணம்
மாலைப்பொழுதில்
கையில் பையுடனும் இடுப்பில் குழந்தையுடனும் ஏறினாள்
யாரோ என்றெண்ணி கைக்குழந்தையுடன்
நின்றவளுக்கு இடமளிக்க எழுந்தேன்....
நடத்துநாிடம் 100 கொடுத்து திட்டுவாங்கி
கொண்டவளுக்காக
12 ருபாய் சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கினேன்
ஏறிட்டு என்முகத்தைப்பாா்க்க
தைாியம் இல்லையொ என்னவோ..
தலைகுனிந்தவாறே டிக்கெட்டை பெற்றுக்கொண்டாள்
அவளின் முன்னிருக்கையின் பின் புறத்தில்
ரேவதிசுரேஷ் என்று என்பெயரோடு அவள்பெயரும் சோ்த்து எழுதப்பட்டிருந்த அவளின் கையெழுத்து
கண்ணில் பட்டுவிட்டது போலும்....
பேருந்து நின்றதும் கெட்டாள் ”வீட்டில் எல்லாரும் நலமா ? என்று
பதில் கூற தோணவில்லை, ஆம் என்பது பொல் தலையசைத்துவிட்டு பேருந்தை விட்டிரங்கி
நடையைக்கட்டினேன் வீட்டிற்கு......
”தொலைந்து போன காதலுக்கும்
உயிர் இருக்கத்தான் செய்கிறது”

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (7-Jan-15, 7:07 pm)
பார்வை : 474

மேலே