நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதைப்போட்டி 2015”

அண்டைய மொழி மோகம் கொண்டு
தாய் மொழியை மறந்து திரியும் காக்கைகளே!
அடிமைப் பட்டு விடுதலைப் பெற்றோம்!
அண்டைய மொழிக்கு அடிமையாய் இருக்கிறோம் இன்றும்.

பிறந்தது தமிழ் நாடு! போவது வெளிநாடு!
வீடு மறந்து நாடு மறந்து உழைக்கிறாய்
நீ அண்டைய நாட்டு வளர்ச்சிக்காக!
தமிழுக்கும் தமிழுக்கும் மதிப்பில்லை தமிழ்நாட்டிலேயே!

ஆதியிலேயே வந்த எந்தமிழ் மொழியை.
பாதியில் வந்த அண்டைய மொழி ஆளுவதா!
பெற்ற அன்னையை மறந்தாயோ!
நீ பகட்டுக்கு ஆசை பட்டாயோ!

தமிழனுக்கோர் பெயருண்டு.
தமிழ் மொழிக்கோர் சிறப்புண்டு.
அது தமிழனுக்கே தெரியவில்லை
என்று எனக்கோர் வெறுப்புண்டு.

இனிக்கும் தேன் கசந்ததோ !
உன் நாவில் அண்டைய மொழி இனித்ததோ!

இப்படியோ நீடித்தால் பிற்காலத்தில்
எந்த சுவடுகளும் இல்லாமல் போகும்
தமிழும் தமிழனும் வாழ்ந்ததற்கு.

தாயை மறந்து விடாதே.
வளர்த்தவள் என்றேனும் விரட்டிவிடுவாள்.
பெற்றவள் என்றும் உன்னை காப்பாள் அவள் உயிராக.

(இந்த படைப்புக்கு நானே முழு உரிமையாளர் இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.)

பு.புவனேஸ்வரி
பூதனுர் (கிராமம் )
பரண்டப்பள்ளி (அஞ்சல் )
போச்சம்பள்ளி (தலுக்க)
கிருஷ்ணகிரி (மாவட்டம்)-635206

எழுதியவர் : புவனா சக்தி (12-Jan-15, 3:21 pm)
பார்வை : 102

மேலே