ஒரு காதல் போராட்டம் இரு மனங்களிலும் -பகுதி 04-புவனா சக்தி

அந்த பெண் சாரி சார் என்று சொல்லி விட்டு வேகமாக சென்றுவிட ஏதும் நடக்காதது போல் மௌனமாக அர்ஜுன் காரில் ஏறி அலுவலகம் சென்றுவிட்டான். அவனால் எந்தவேலையும் சரியாக செய்ய முடியவில்லை .சௌமிய சொன்ன வார்த்தைகள் மட்டும் தான் அவன் செவிகளில் ஒளித்துக் கொண்டிருந்தது.
வேலை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட தயாரானான் அப்போது அவனது செல் சிணுங்க ஹலோ சொல்லு வருண் என்றான் (இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள்) எதிர்முனையில் வருண் பேசினான் அர்ஜுன் நான் ஒரு முக்கியமான வேலைய ஒரு இடத்துக்கு போயிட்டு இருக்கேன் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றான் வருண் ,அதற்கு அர்ஜுன் சொல்லுடா என்றான் ,என்னோட போட்டோஸ் எல்லாம் நாம எப்பயும் கொடுக்குற ஸ்டுடியோல கொடுத்திருக்கேன் அதா வாங்கிட்டு வந்துரு டா எனவும்,அதற்கு அர்ஜுன் எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நீயே நாளைக்கு வங்கிக்கோ என்றான்.
இல்ல அர்ஜுன் அந்த போடோஸ் நாளைக்கு அம்மா வேணும்னு சொன்னங்க அந்த ஸ்டுடியோ -காரன் இன்னைக்கு ராத்திரி ஊருக்கு போறானாம் வர ஒரு வாரம் ஆகுமாம் .நீ வாங்கிட்டு மட்டும் வா நான் நாளைக்கு கலையில உன் ஆப்பிசுக்கு வந்து வாங்கிக்கிறேன் என்றான் .
ஓகே வருண் என்று சொல்லி விட்டு கால் கட் செய்துவிட்டு கார் போட்டோ ஸ்டுடியோவை நோக்கி சென்றது போட்டோவை வாங்கிக்கொண்டு அர்ஜுன் வெளியே வரும் போது எதிரில் வந்த பெண் அவனை இடித்துவிட இருவரின் கையில் இருந்த கவரும் கிழே விழ இருவரும் அதை எடுக்க குனிய இருவரின் தலைகளும் மோதிக்கொண்டது .அந்த கவரை எடுத்துக்கொண்டு அந்த பெண் சாரி சார் என்றால் .
அவன் எதுவும் சொல்லாமல் வேகமாக செல்ல அந்த பெண் அங்கேயே நின்று அவன் செல்வதை பார்த்து இந்த ஆளுக்கு சாரி சொன்னக்கூட இட்ஸ் ஓகே இல்ல வேற எதாவது சொல்ல தெரியாத என்று உள்ளே செல்ல மீண்டும் ஏதோ தோன்ற இந்த ஆளா எங்கேயோ பாத்திருக்கோமோ!!!!.........
-தொடரும் .