A.K.ரங்கநாதன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  A.K.ரங்கநாதன்
இடம்:  உத்திரமேரூர் (காஞ்சிபுரம
பிறந்த தேதி :  24-Jan-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2011
பார்த்தவர்கள்:  249
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நிலையான, உண்மையான, நம்பிக்கையான நட்பையே விரும்புகிறேன்.

என் படைப்புகள்
A.K.ரங்கநாதன் செய்திகள்
A.K.ரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2019 4:30 pm

துப்புரவு பணியில் புதிய யுக்தியை பயன்படுத்த காஞ்சிபுரம் துளிர் இல்ல மாணவி பரிமளா, மேகனா ஆகியோர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதில் நாங்கள் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க காஞ்சிபுரம் நகராட்சியின் துப்புரவு பணியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
அந்த ஆயிவில் நகராட்சி நிர்வாகத்தில் களப்பணியாற்றும் துப்புரவாளர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. கூலிக்கு ஆள் அமர்த்தி பணியாற்றுவதால், பொறுப்புடன் பணியாற்றும் நபர்கள் குறைவு. சரியான காலநிலையில் பணியாற்ற தவறுவதால், குப்பை தொட்;டிகளில் குப்பைகள் நிரம்பி சிதறி கிடக்கும் நிலை பெரும்பாலும் பார்க்க முடிகிறது. வீதிகளுக்

மேலும்

A.K.ரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2019 4:23 pm

காஞ்சிபுரம் திருக்காலிமேடு குளங்கள் சீரமைக்க வேண்டி காஞ்சிபுரம் பள்ளி மாணவி அங்களா பரமேஸ்வரி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், நாங்கள் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள பழமை வாய்ந்த 2 குளங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். அந்த ஆயிவில் முற்காலத்தில் சின்ன வேப்பங்குளம் குடிநீருக்காகவும், பெரிய வேப்பங்குளம் மக்கள் குளிக்க, துவைக்க, கால்நடைகள் உபயோகம் உட்பட இதர தேவைகளுக்காகவும் 2 ஆக பிரித்து குளங்களை வெட்டி பயன்படுத்தி உள்ளனர். ஆனால் தற்போது இரு குளங்களும் அகலம், நீளம், ஆழம், குறைந்து ஆக்கிரமிப்பாலும், தூர்வாரப்படாமல்

மேலும்

A.K.ரங்கநாதன் - A.K.ரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 4:34 pm

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக, காஞ்சிபுரம் ஆட்கோ அவென்யூவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் சர்.சி.வி.ராமன் துளிர் இல்ல மாணவர்களான லெஷ்மி, தரணி, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் நகரில் சரியான கட்டமைப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் அடையும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பெரும்பாலான கட்டமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை. சாலைகளின் நடைமேடை பலர் ஆக்கிரமித்துள்ளதால், சாதாரண மனிதர்கள் வாகனம் செல்லும் சாலைப்பகுதியில் இறங்கி எளிதாக கடப்பதாகவும், தங்களால் இயலவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் கூறுவதாக தெரிவித்தனர். கு

மேலும்

A.K.ரங்கநாதன் - A.K.ரங்கநாதன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2017 4:38 pm

மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை குறைக்க 
 மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

                    மத்திய அரசின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக, காஞ்சிபுரம் ஆட்கோ அவென்யூவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் சர்.சி.வி.ராமன் துளிர் இல்ல மாணவர்களான லெஷ்மி, தரணி, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் நகரில் சரியான கட்டமைப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் அடையும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.    ஆய்வில் பெரும்பாலான கட்டமைப்புகளில்  மாற்றுத்  திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை.   சாலைகளின் நடைமேடை பலர் ஆக்கிரமித்துள்ளதால், சாதாரண மனிதர்கள் வாகனம் செல்லும் சாலைப்பகுதியில் இறங்கி எளிதாக கடப்பதாகவும், தங்களால் இயலவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் கூறுவதாக தெரிவித்தனர்.  குறிப்பாக அலுவலகம், மருத்துவமனை, வீடுகள், வணிக கடைகள் அனைத்திலும் முகப்பு வாயிலின் படியை கடப்பதிலும், அடிக்குமாடி படியினை கடப்பதிலும் சிரமப்படுகிறார்கள். கழிவறைகளை பயன்படுத்துவதிலும் சிரமப்படுகிறார்கள்.  நடைமேடை, பேருந்து நிறுத்தம், பேருந்து நிலைய பயணியர் அமரும் இடம் இவைகளின் கட்;டமைப்புகளில் முகப்பில் ஏறும்போது சிரமப்படுகிறார்கள்.  கோவில்கள் முகப்பு படிகள் மாற்றுத் திறனாளிகள் ஏற வசதியாக இல்லை.  அதேபோல் ஆலயங்களின் உட்புறம் நுழைவாயில்கள், தரிசன வழிகளை கடப்பது  கடினமாக உள்ளது என்றும், அவைகளில் மாற்றங்கள் வேண்டும் என்றும் கூறினர்.    எனவே இக்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட  வேண்டிய மாற்றங்கள் குறித்து கேட்டபோது, வணிகக் கட்டடங்கள், அலுவலகம், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில்,  சாலையில் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகளில் வணிக்கடைகள், கேலிக்கை கட்டடங்கள் உட்பட பலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர்.  அதனால் சாதாரணமாக நடந்து செல்பவர்கள் வாகனங்கள் செல்லும்  சாலைகளில் இறங்கி கடந்து செல்கிறார்கள்.  ஆனால் ஊனமுற்றோர்கள் வாகனம் செல்லும் சாலையில் செல்வது கடினம்.  ஆகையால் நடைமேடையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், பழுதுகளால் சிரமப்படுகிறார்கள்.  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.  நடைமேடையில் ஏறுவதற்கு வசதியாக பக்கவாட்டு அமைப்புகள் சாய்வு தளத்தில் தரைவரை இறங்க வேண்டும்.  நடைமேடையின் பக்கவாட்டில் பிடிப்பு கம்பி பொருத்தப்பட்டு, அதில் கண்பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் சில குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும்.  அதாவது மாவட்டம், அப்பகுதி, செல்லும் தெரு, அடுத்த தெரு, எந்த திசை கண்பார்வையற்றோர் தொட்டு உணரும் விதத்தில் சில குறியீடுகள் கொடுக்கப்பட்டு, அதில் பதியப்பட வேண்டும்.  அப்படி பதியப்பட்டால் அதனை தொட்டு உணரும் கண்பார்வையற்றோர் எந்த மாவட்டத்தில் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை அறிவர்.  அடுத்து எந்த பகுதிக்கு எந்த திசையில் செல்கிறோம் என்பதையும் உணர்வர்.   ரயில்வே நிலையங்களில் உள்ள முகப்பு நுழைவாயில் படிகள், ஓவர்பிரிட்ஜ் மற்றும் சப்வே படிகட்டுகளில் ஏற சிரமப்படும் மாற்றுத் திறனாளிகள் கடப்பதற்கு வசதியாக சாய்வு தளமாக அமைக்கப்பட வேண்டும்.   அடுக்குமாடி கட்டடங்களில்  மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக கட்டாயம் (வீடுகளில் குறைந்தது 2 மாடிக்கு, அலுவலகம், வணிக கடைகள், தொழிற்சாலைகள் என்றால்  ஒரு மாடி என்றாலே) லிப்ட்; வசதி இருக்க வேண்டும்.  அதில் எத்தனையாவது மாடிக்கு வந்துள்ளோம் என்பதை குறிக்க வசதியாக ஒளி-ஒலி அமைப்பு இருக்க வேண்டும். கண்பார்வையற்றோருக்கு ஒலி அமைப்பு சவுண்ட் மூலமும், காது கேட்காதவர்களுக்கு ஒளி அமைப்பு கலர்லைட் மூலமும் எந்த மாடிக்கு வந்துள்ளோம் என்பதை வெளிப்படுத்தும். கழி;வறைகளில் கால் ஊனமுற்றோர்கள், கண் பார்வையற்றோர்கள் உட்பட  பயன்படுத்துவதற்கு எதுவாக கட்டமைப்பு வேண்டும். அரசு அலுவலகங்களில் வரிசைக்குரிய அமைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வழி வேண்டும். அப்படி இருந்தால் சாதாரண மக்களோடு மிதிப்படமாட்டார்கள்.   அரசு சார்பில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட விதிகள் அமைக்கப்பட்டு, அதன்படி கட்;டமைப்புகள் ஏற்படுத்தப்பட்;டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்களும்  மாற்றுத்  திறனாளிகளுக்கு ஏதுவாக அவரவர்  வீடுகளின்  கட்டமைப்புகள் அமைக்கப்பட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதியான கட்டமைப்புகள் இன்னும் ஏற்படுத்தப்பட வேண்டும்  என கூறினர்.  ஆய்வினை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் அச்சடித்து, பொதுமக்களிடையே வழங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் பிரிவில் மனு அளித்து, அப்போது மாவட்ட வருவாய் அலுவலரிடம் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கும்படி ஆய்வு குறித்து கலந்துரையாடியுள்ளார்கள்.       

மேலும்

நல்ல விஷயம் சார் இது எப்போது நடைபெற்றது 14-Nov-2017 3:04 am
A.K.ரங்கநாதன் - எண்ணம் (public)

08-Nov-2017 4:59 pm

  மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் பயன்படுத்தப்படுமா?

 மாணவர் ஆய்வு வெளி செல்லும் உண்மைகள்   

இந்த ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குழு மூலம் வழங்கப்பட்ட “மாற்றுத் திறனாளிகளின் செயல்பாட்டிற்கு உதவும் அம்சங்களோடு கூடிய நிலைப்புரு மேம்பாட்டிற்கான  அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள்”என்ற கருப்பொருளில், ‘’ஆற்றல்” என்ற துணை கருப்பொருளில், மாற்றுத் திறனாளிகளின் உழைப்பை அவர்களின் வளர்ச்சிக்கும், அதன் விளைவாக நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வினை மேற்க்கொண்டோம்.   எங்கள் ஆய்வுத் தலைப்பான ’’மனித ஆற்றலில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு -ஓர் ஆய்வு’’ என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு நெட்டேரி, வினாயகபுரம், ஒலிமுகமதுப் பேட்டை, வெள்ளைக் குளத்தெரு, கீழ் அம்பி,  சிறுகவேரிப்பாக்கம் உட்பட்ட பகுதிகளை தேர்வு செய்து ஆய்வினை மேற்கொண்டோம்.   முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகளிடம் தகவல் சேகரிக்கும் பொருட்டு 10 வினாக்கள் கொண்ட வினாப்பட்டியல் ஒன்று தயாரித்து, அதன் மூலம் உரிய தகவல்களை சேகரித்தோம். பின்பு மாற்றுத்திறனாளிகளிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதிகளை நேரடியாக உற்றுநோக்கி அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் போன்ற தகவல்களை குறித்துக் கொண்டோம். மேலும் ஆய்விற்கான ஆதாரங்களை புகைப்படம் எடுத்துச் சேகரித்தோம்.   ஆய்வின் முடிவில் மாற்றுத்திறனாளிகள் வைத்துள்ள  இலட்சியத்தை அடைய பல்வேறு தடைகள் இருந்ததைத் தெரிந்துக் கொண்டோம். அவர்களுடைய இலட்சியங்களாக கூறும் பொழுது விவசாயம், ஆசிரியர், காவலர், வழக்கறிஞர், பொறியாளர் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு லட்சியங்களை கூறினார்கள். ஆனால், அவர்கள் லட்சியங்களை அடைய தடையாக இருப்பதாக ஏழ்மை நிலை, கல்வியின்மை, சமுதாய ஒதுக்கீடு போன்றவற்றை கூறினார்கள்.   தற்பொழுது செய்யும் வேலைகளாக தையல்காரர், ஆசிரியர், சுயத்தொழில், பாதுகாவலர், கணிப்பொறியாளார் மற்றும் நூலகப் பாதுகாவலர் என பலபணிகளை மேற்கொள்வதாக சிலர் கூறினார்கள். மேலும் ஒரு சிலரால் வேலைகள் பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறினார்கள். மேலும் அவர்களில் 20% பேர் இலசியத்தை அடைய முடிந்ததாகவும், 80% பேர் இலட்சியத்தை அடைய முடியமல் இருப்பதாகவும் கூறினார்கள். இலட்சியத்தை அடைவதற்கு தடையாக தங்களின் ஊனத்தையும், முயற்சியின்மை, பள்ளியில் சேர்க்கவில்லை, வாகன வசதியில்லை, குடும்ப சூழ்நிலை போன்றவற்றை கூறினார்கள்.   மாற்றுத்திறனாளிகள் தங்கள் எதிர்பார்ப்பாக மக்கள் அனைவரும் எங்களிடம் பேச வேண்டும், எங்களை ஒதுக்கக் கூடாது, எங்களை அனைவரும் மதித்து, தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும் என கூறினார்கள். அரசாங்கத்திடம் ஒரு சிலர் உதவித் தொகை பெறுவதாகவும், வண்டிகள் பெற்றதாகவும் கூறினார்கள். மேலும் ஒரு சிலர் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு சலுகைகளும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்கள். மேலும் அரசாங்கத்திடம் அவர்கள் இட ஒதுக்கிட்டிற்கு முன்னுரிமை, கடனுதவி, சிறுதொழில் பயிற்சி போன்றவற்றை எதிர்பார்ப்பதாக கூறினார்கள். அவர்களின் வேலைகளில் அரசுத்துறையில் 30% பேரும், தனியார் துறையில் 5% பேரும், சுயத் தொழில் 2% பேரும், இதிலிருந்து 37% பணியிலும், தற்காலப் பிழைப்பாக 53% பேர் வேலையிலும், 10% பேர் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.   ஆய்வு தீர்வாக பார்க்கும் பொழுது “மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றும் அரசின் அலட்சியத்தால் மாற்றுத்திறனாளிகளின் ஆற்றலனாது பயன்படுத்தபடாமல் வீணடிக்கப்படுகிறது’’ என்பது உறுதியாகிறது. அதுமட்டுமின்றி குறிப்பாக “அவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளும், சிறுத்தொழில் மேற்கொள்ள கடனுதவிகள், படிப்பறிவு அல்லாததால் அவர்கள் ஆற்றல் வீணாகிறது’’ என்பது தெளிவாகிறது. அவர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்க அரசும் இதனை மேற்கொள்ள் வேண்டும்.   எங்கள் குழு வழங்கிய ஆலோசனையாக, மக்களின் ஆற்றல் பயன்படுத்துவது போல மாற்றூத்திறனாளிகளின் ஆற்றலும் முழுமையாக பயன்படுத்த அரசு திட்டமிடவேண்டும்.  மாற்றுத்திறனாளிகளின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி அவர்களின் இலக்கை அடைய துணை நிற்கும்படி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு தரவேண்டும். சுயதொழில் செய்ய கடனுதவி> பயிற்சி> வழிகாட்டல் ஆகியவற்றில் அரசு முன்னுரிமைக் கொடுக்க  வேண்டும்.  மக்களும் அவர்களை ஏளனமாக பார்க்காமல், அவர்களை ஒதுக்கி விடாமல் தனது உடன் பிறப்பாக, நண்பர்களாக சகஜமாக பழகவும், மக்களுக்கு அதனைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.   மேற்படி வழிகாட்டுதல்களை  செயல்படுத்தினால் மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் முழுவதும் அவர்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும் நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கும் உதவியாக  இருக்கும் என்பதில்  சந்தேகமில்லை.            

மேலும்

A.K.ரங்கநாதன் - A.K.ரங்கநாதன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2015 7:57 pm

“காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம் - ஓர் ஆய்வு” (ஏரி, குளம், குட்டை)

இந்த ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு குழு மூலம் வழங்கப்பட்ட ‘காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலையைப் புரிந்துகொள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘மனித தலையீடுகளினால், தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலையில் ஏற்படும் விளைவு’ என்னும் துணை கருப்பொருளை தேர்வு செய்து, அதன் அடிப்படையில்  நீர்வளத்தை தக்க வைத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வினை மேற்கொண்டோம்.  

எங்கள் ஆய்வுத் தலைப்பான “காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம் - ஓர் ஆய்வு” (ஏரி, குளம், குட்டை) என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு நெட்டேரி-தேவராஜபுரம், கீழ்அம்பி, 214 கோவிந்தவாடி அகரம்பூர், கூரம், 22 சிறுகாவேரிப்பாக்கம், விநாயகபுரம், முகாம்பிகை நகர், ஒலிமுகமதுபேட்டை (காஞ்சிபுரம்) ஆகிய பகுதிகளை தேர்வு செய்து ஆய்வினை தொடர்ந்தோம்.  

முதல்கட்டமாக மக்களிடம் தகவல் சேகரிக்கும் பொருட்டு, 11 வினாக்கள் கொண்ட வினாடிப்பட்டியல் ஒன்று தயாரித்து, அதன் மூலம் உரிய தகவல்களை சேகரித்தோம்.  பின்பு மக்களிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரடியாக உற்றுநோக்கி தேவையான தகவல்களை எடுத்துக் கொண்டோம். மேலும் ஆய்விற்கான ஆதாரங்களை புகைப்படம் எடுத்து சேகரித்தோம்.

ஆய்வின் முடிவில், முற்காலத்தில் இருந்த 6 ஏரிகளும் தற்போதும் உள்ளது என்றாலும், அதில் 2 ஏரிகள் தற்போது பராமரிப்பின்றி இருப்பது தெரியவந்துள்ளது.  குளங்களில் முற்காலத்தில் இருந்த 10 எண்ணிக்கையில் இருந்து தற்போது 6 ஆக குறைந்து 4 குளங்கள் முற்றிலும் அழிந்துவிட்டது என்பதை உணர வைத்தது. அதிலும் தற்போது உள்ள 6 குளங்களில் 2 குளங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளது.  குட்டைகளை பார்க்கும் போது முற்காலத்தில் அதிகப்படியாக 14 இருந்துள்ளது.  இன்றைய நிலையில் 9 குட்டைகள் அழிந்து, மீதமுள்ள 5 குட்டைகளும் அழிந்து வரும் நிலையில் உள்ளது.  

முற்காலத்தில் நீர்நிலைகளால் மக்கள், தனது அன்றாட வாழ்க்கையில் குடிக்கவும், துணி துவைக்கவும், வீட்டின் இதர பயன்பாட்டிற்கும், வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதற்கும், சிறுதொழில்களான பானை செய்தல், அப்பளத்தொழில், நெசவு மற்றும் செங்கல் சூளை போன்றவற்றிற்கும் நீரினை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.  ஏரிகளில் ஆண்டுதோறும் பருவ மழைகளால் நிரம்பி வரும் நீரைக்கொண்டு வேளாண் தொழில் 100 சதவிகிதம் சிறப்பாய் மேற்கொண்டனர்.   

மேலும் நீர்நிலைகள் முற்காலத்தை காட்டிலும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது கண்கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் இருக்கும் நீர்நிலைகளில் சிலது அழிந்து வருவதும் தெரிகிறது.  இதற்கு உரிய காரணத்தை தேடிப் பார்த்ததில், மக்கள் வேண்டாத கழிவுகளாக கருதப்படும் பொருட்களை, குப்பை-கூளங்களை நீர்;களின் கரையிலும், நீரைகளுக்குள்ளும் போடப்படுவது அறிந்தோம்.  அதேபோல் இறந்தவர்கள் உபயோகித்த பொருட்களை நீர்;நிலைகளில் போடுவதையே சில சமூகங்கள் வழக்கமாக கொண்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊர் பொதுமக்களே, தங்கள் பகுதிக்கு உட்பட்ட நீர்;நிலைகளை வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை தூர்வாரி, பராமரிப்பதும், மழைகாலங்களில் இயற்கை அளிக்கும் கொடையான மழைநீரை நீர்நிலைகளில் கொண்டு சேர்க்கும் விதத்தில் கால்வாய் அமைத்து பராமரிப்பதும் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அத்தைகைய வழக்கத்தை கைவிட்டுவிட்டனர். தற்போது உற்றுநோக்கியதில் நீர்நிலைகளுக்குள் நெல் ஆலைகளும், சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைவான நீர்நிலைகளாலும், பராமரிப்பின்றி கிடக்கும் நீர்நிலைகளாலும் மக்கள் தனது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு இடஞ்சல்களை சந்திக்கின்றனர்.  குறிப்பாக முற்காலத்தில் 40 சதவிகிதம் விவசாயத்தை நம்பி இருந்த மக்கள், தற்போது 15 சதவிகிதமே விவசாயம் செய்கின்றனர்.  சிறுதொழில்கள் செய்வோர் 30 சதவிகிதத்தில் இருந்து         5 சதவிகிதமாக குறைந்துள்ளது. குடிநீருக்கு 100 சதவிகிதமும் நீர்நிலைகளை நம்பி இருந்த மக்கள் தற்போது 70 சதவிகிதம் மட்டுமே நீர்நிலைகளில் குடிநீர் பெறுகின்றனர்.  மீதமுள்ள 30 சதவிகிதம் பேர் பணம் கொடுத்து வாட்டர்கேன் மூலம் குடிநீர்; பெறுகின்றனர்.

ஆய்வின் தீர்வாக பார்க்கும்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், நீர்நிலைகளில் குப்பைகள், வேண்டாத இதர கழிவுகள், அடர்ந்த செடி-கொடிகள் என ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, பராமரிப்பு இன்றி பெருமளவு அழிந்து வருகிறது.  சிலது முற்றிலும் அழிந்துவிட்டது.  இதனால் தண்ணீர் தட்டுபாடு மேலும் அதிகரிப்பது என்பது உறுதி.

மேற்படி ஆய்வின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, நீர்நிலைகளின் பராமரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து எங்கள் குழு சில ஆலோசனைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களிடம் வழங்கி, விளக்கமளித்து விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்.  மேலும் பொது இடங்கள் மற்றும் மாணவச் செல்வங்களிடையே நீர்நிலைகள் குறித்து கருத்துரைகள் வழங்கியும், போட்டிகள் வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என காத்திருக்கிறோம்.

ஆய்வினை தொடர்ந்து, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்.  அதன் மூலம் நீர்நிலைகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறதா? எத்தனை நீர்நிலைகள் தூர் வாரப்பட்டுள்ளது? வருங்காலத்தில் நீர்;நிலைகள் பராமரிப்பிற்கு ஏதேனும் பணிகள் அதில் திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை உள்ளடக்கி இந்த ஆய்வினை தொடங்கியுள்ளோம்.  இதன் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் நீர்நிலைகளை பராமரிக்க எவ்வாறு செயல்பட முடியும் என்பதை அறியவே இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.

அதன்விளைவாக இதுவரை கிடைத்த தகவல்படி இத்திட்டத்தில் பணியாளர்கள் அதிகப்படியாக நீர்நிலைகள் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதும், எந்தவொரு நீர்நிலையிலும் உரிய பணி முழுமை பெறாமல் வெவ்வேறு நீர்நிலைகள் என மாறி மாறி கடமைக்காக குறிப்பிட்ட நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணி
யாற்றுவதும் தெரியவருகிறது.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

Swathi Priya

Swathi Priya

Trivhy
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே