ராஜேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜேஸ்வரி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  149
புள்ளி:  8

என் படைப்புகள்
ராஜேஸ்வரி செய்திகள்
ராஜேஸ்வரி - எண்ணம் (public)
08-Apr-2018 8:10 pm

உனக்காக

மாலை தொடுத்தேன்

என் நந்தவன

மலர்கள் கொண்டு



உனக்காக

மலர்கள்

படைக்கிறேன்

என் இதழ்கள்

கொண்டு



இதழ்களில்

தவழ்வது

பனித்துளி அல்ல



உன் ஸ்பரிசமெனும்

மோட்சம் காண

தவமியற்றும்

என் உயிரின்துளி



வலிகளை மனதோடு

மறைத்து

மலர்களை

பரிசளிக்கிறேன்



என் காதல்

நீ ஏற்பாயென்று.

மேலும்

அருமை 09-Apr-2018 5:21 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 10:04 am

அப்போது நான்
அப்படியிருந்தப்போதும்
போர்...!
இப்போது நான்
இப்படியிருந்தப்போதும்
போர்...!
ஏழைச் சிறுக்கியாய்
இழுத்து மூடிய ஆடையோடு
உலாவியப் போதும்
போர்..!
உலக அழகியாய்
இடை தொடை திறமைக்காட்டி
பூனை நடையின்போதும்
போர்...!
எங்கேயும் எப்போதும்
எனக்கு..
என் மீது
என் உடல் மீது
போர்..................!
அய்யோ போர்....!

என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....!

மேலும்

அஹ்ஹ்ஹா 28-Sep-2015 5:17 pm
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இந்தப்போர் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது..இதென்ன பெண்வாழ்க்கைச் சாபமா? இந்தப் போரில்லாத அமைதியான வாழ்வை எல்லோருக்கும் வழங்கட்டும் இறைவன் 18-Sep-2015 10:18 pm
நன்றி அம்மா 18-Sep-2015 9:57 pm
அது திமிரு .. வரம்பு மீறினால்.. வம்பு வரத்தான் செய்யும்.. வந்தாலும் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. .................. கருத்திற்கு நன்றி சார். 18-Sep-2015 9:57 pm
ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) indranigovindhan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-May-2015 12:48 pm

ரேவதி முகத்தில் பதட்ட ரேகை அப்பட்டமாக தெரிந்தது, கண்ணாடிக்கு முன் எத்தனை முறை முயற்சி செய்தும் சீ சீ இப்படி சொல்ல கூடாது என்று தன்னையே நொந்து கொண்டு இறுதியில் சோர்ந்து போய் மெத்தை மீது அமர்ந்தாள்...

என்னங்க, ப்ளீஸ் நீங்களே சொலுங்களேன், என்னால முடியல...

அதுலாம் முடியாது, இத பத்தி பேச நீ தான் சரியான ஆளு, நான் பேசினா விஷயம் தப்பாயிடும்...
அது மட்டுமா நீ தான் சிறந்த டீச்சராச்சே, அடிக்கடி சொல்லி பெருமை பட்டுபியே, அதலாம் இப்ப எங்க போச்சு...நீ தான் இந்த விஷயத்த பத்தி பேசணும், அது உன் பொறுப்பு...

இதலாம் அநியாயம் இப்படி என்ன மாட்டி விடரின்களே, அவ கண்ண பாத்தாலே எனக்கு பேச்சே வரமாட்டேன்குது, நா

மேலும்

நன்றி தோழமையே, உங்கள் கருத்தில் மகிழ்ந்தேன்....எனது அடுத்த படைப்பில் என் தவறுகளை திருத்திக்கொண்டு மேலும் சிறப்பாக படைக்க முயற்ச்சிக்கிறேன்.... 01-Jun-2015 2:41 pm
நல்ல கதை, கதை ஆரம்பித்த விதம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைப்பதை இருந்தது நன்று. குழந்தை சொல்லி கொண்டிருக்கும் போது ரமேஷ் அங்கிள் வந்திருந்தால் முடிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (ஒன்று ரமேஷ் அங்கிள் திருந்தியிருக்க வேண்டும் அல்லது அவருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்க வேண்டும்) இருப்பினும் கதை அருமை, சமூகத்துக்கு தேவையான கருத்து. நல்ல ஆரம்பம் இன்னும் பல படைப்புகளை தர வாழ்த்துகிறேன். 01-Jun-2015 1:36 pm
உங்கள் பாராட்டில் மகிழ்ச்சி தோழமையே, எனக்கும் ஆசைதான் அப்படிப்பட்ட அங்கில்களை கன்னத்தில் அறைய வேண்டும் என்று...குழந்தையை தெய்வமாக கூட பார்க்க வேண்டாம், கலங்கபடமில்லா குழந்தையாக நினைத்தாலே போதும், அதை மறந்து அந்த குழந்தையிடமே சுகத்தை தேடும் கொடூரமான ஜென்மங்களை எதிர்த்து நின்று அழிக்கத்தான் ஆசை தோழமையே....எனது அடுத்த படைப்பை இன்னும் சிறப்பாக்க முயற்ச்சிக்கிறேன் தோழமையே.... 01-Jun-2015 10:56 am
இக்காலத்துக்கு தேவைப்படுகிற கருவை எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் சம்பவங்களைக் கோர்த்து அந்த ரமேஷ் அங்கிளை ஒரு அப்பு அப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. 30-May-2015 7:50 pm
ராஜேஸ்வரி - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2015 9:44 am


*படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்*

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதோ ஒரு அனுபவத்தை உள்வாங்கிக் கொள்கிறார் ஒரு மனிதர்...

காணும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு ரசனையைப் பதிக்கத் தொடங்குகிறார் ஒரு கவிஞர் ..

ஒரு உளி அறிந்து இருக்குமா , தான் உடைத்துக் கொண்டிருப்பது ஒரு பாறையை அல்ல .. தான் செதுக்கிக் கொண்டிருப்பது ஒரு சிற்பத்தை என்று... ஒரு கண்ணாடிச் சதுரத்துக்குள் ஒளிந்திருக்கும் சிறு கோடுகளுக்குத் தெரியுமா அவை வெறும் வண்ணக் கலவைகள் அல்ல , ஓவியங்கள் என்று...

வெறும் பாறையையும் சிற்பமாகப் பா (...)

மேலும்

தம்பியின் கருத்துக்கள் எப்போதும் தைரியம் கொடுக்கும் .. மிக்க நன்றி தம்பி..!! 06-May-2015 5:31 pm
வெற்றி உங்களுக்கானது ... வித்யாசமான சிந்தனை .... போட்டிகள் புது வடிவம் பெறுகிறது ... தொடருங்கள் ....வாழ்த்துக்கள் ... 06-May-2015 3:18 pm
மிக மகிழ்ந்தேன் அம்மா.. மிக்க நன்றி...!! 06-May-2015 1:53 pm
மிக்க நன்றி தோழரே..........!! 06-May-2015 1:53 pm
உமை அளித்த படைப்பில் (public) agan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2015 9:21 pm

கோட்டோவிய மழலைகள்
குதலை மொழிக் குருவிகள்
பாட்டாகிய கவிதைகள்
பத்துத் திங்களின் நிலவுகள்

காட்டாறென தளிர் நடை
களி சேர்த்திடும் குறு நகை
கேட்டாயிரம் சுகம் வரும்-மனுக்
குலம் வாழ்ந்திட வழிதரும்.

காற்றாடிடும் மலர் வனம்
கலி தீர்த்திடும் பெருவனம்-உணர்வு
ஊற்றாகிய உறைவிடம்-நம் உயிர்
வாழ்ந்திடும் இருப்பிடம்.

பொய்யா மொழிப் புலமைகள்
பிணி போக்கிடும் புதுமைகள்
வையாதீர் அவை வாடிடும்
வைரங்கள் ஒளி மங்கிடும்

பூப்போல் நிறம் காட்டிடும்
புலர் காலையின் இளஞ்சூரியர்
காப்போம் கண் மணியென- உலகை
மேய்ப்பார் நாளை இவர் ஆதலால்..

மேலும்

அருமையான கவிதை தோழமையே 21-Apr-2015 1:54 pm
மிக்க நன்றி தோழமையே 26-Mar-2015 6:13 pm
மிக்க நன்றி தோழமையே... 26-Mar-2015 6:13 pm
பொய்யா மொழிப் புலமைகள் பிணி போக்கிடும் புதுமைகள் வையாதீர் அவை வாடிடும் வைரங்கள் ஒளி மங்கிடும் ...... அருமை...அருமை...தோழமையே... 26-Mar-2015 12:24 pm
ராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2015 2:57 pm

மாணவன்: டீச்சர்! செய்யாத தப்புக்கு நீங்க
தண்டனை தருவீங்களா?

ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?

மாணவன்: நான் ஹோம் வொர்க் செய்யல.
அதனாலதான் கேட்டேன்.

மேலும்

சூப்பர் ஐடியா!! 11-Apr-2015 5:55 pm
சூப்பர் நண்பா 11-Apr-2015 5:44 pm
ஹா ஹா ஹா ... 11-Apr-2015 5:05 pm
ஹ் ஹ் ... அட சரி தானபா 11-Apr-2015 5:02 pm
சித்ராதேவி அளித்த எண்ணத்தை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Mar-2015 8:49 am

படைப்புகள் ஆதரிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல. படைப்புகள் விமர்சிக்கப் பட வேண்டுமே அன்றி படைப்பாளி அல்ல. சில நேரங்களில் நாம் சொல்ல வரும் கருத்தை சரியான கோணத்தில் சொல்ல முடியாமல் போனால் அதற்கு கடும் கண்டனம் எழும். அதானாலே பல நேரங்களில் நம் எண்ணத்தை பகிர முடியாமல் போவது திண்ணம். எழுத்து தளம் அனைவரது திறமையை வெளிச்சமிட்டு காட்டும் ஓர் அரங்கம்.
இதில் தேர்ந்தெடுக்கப் படும் கவிதைகள் பல நேரங்களில் ஆச்சர்யப்பட வைக்கிறது. எதனடிப்படையில் இதெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. சில கவிதைகள் நல்ல க (...)

மேலும்

புரிதல் போதும் சகோ. நன்றி 13-Apr-2015 2:47 pm
அந்தத் தவறை நான் உணர்ந்து விட்டேன் தோழமையே ...தவறை உணர்ந்ததாக ஓர் எண்ணமும் பதிவிட்டுவிட்டேன் .....! மன்னிக்கவும் தாங்கள் என்னை 09-Apr-2015 9:13 pm
மன்னிக்கவும் தோழா , நான் என் கருத்தை பதியும் போது பரிசுக்குரிய படைப்பு அறிவிக்கப்படவில்லை. நான் மார்ச் 29 ல் என் எண்ணத்தை பதிவு செய்தேன். 08-Apr-2015 6:25 pm
ஹி ஹி 06-Apr-2015 12:02 pm
ராஜேஸ்வரி - கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Apr-2015 3:48 pm

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

இன்றைய கல்வி கூடங்கள்
ஏட்டு சுரைக்காயை
மட்டுமே தருகின்றன

வாழ்க்கை பாடமோ, ஒழுக்கமோ
கற்று தருவதில்லை

படித்து முடித்து
வெளியில் வந்த பிறகுதான்
இது புரிகிறது

இதற்கு தீர்வு என்ன?

மேலும்

இனி வரும் தலைமுறைகளுக்காவது சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் 06-Apr-2015 5:49 pm
உண்மைதான் ஒரு எழுத்தாளர் அழகாக சொன்னார் : வாழ்கையை தேடிச் செல்பவர்கள், மனிதர்களை நம்பியே தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள். படித்தவர்கள்தான் யாரையும் எதையும் நம்பத்தயாராக இல்லை. கல்விக்கூடங்களில் அறிவுகள் திணிக்கப்படுகின்ற தவிர கற்பிக்கப்படுவதில்லை என பல சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. உதரணமாக கார்பரேசன் வாழ்க்கை. எல்லோருமே ஒரு முகமூடிகளை அணிந்து கொண்டே வாழ்கிறார்கள். இது குறித்து இன்னும் தெளிவாக எனது அதிர்வுகள் கட்டுரை தொகுப்பில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இச்சம்வன்களே என்னை எழுத வைத்தன. என்னுடைய குற்றச்சாட்டு கல்விக்கொடங்கள் மனித நேயத்தை உளமார கர்ப்பிக்கவில்லை என்பதுவே. பலர் மனித நேயத்துடன் இருப்பதான காரணம் அவர்களுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. 06-Apr-2015 5:10 pm
ராஜேஸ்வரி - ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2015 2:43 pm

பிறப்பிடத்தை எட்டி உதைத்து உந்தி
பிறந்தாயே இவ்வுலகைக்காண
உன் முன் வரிசைப் பற்களைக் கொண்டு
உணவு உண்ணும் அழகுக்கு ஈடு இணையுண்டோ

உன் மழலை இசையைக் கேட்க
உன் அருகில் தினமும் காத்திருந்தேனே
உன் கொஞ்சும் தமிழைக் கேட்க
உனக்காகவே பிறந்தேன் என்று எண்ணினேனே
உன் சிரிப்பின் அழகைக்காண
உன் அடிமையானேனே நான்

உன் பிஞ்சுவிரல் என் கைவிரலைப் பிடித்து - நீ
உற்சாகமாக நடக்கும் பொழுது அத்தனை மகிழ்ச்சி கொண்டேனே
உனக்கு புத்தாடை உடுத்தி தினமும் அழகுப் பார்க்கும் போது
உடம்பு வலி இருந்தால் கூட சிட்டாகப் பறந்துபோகுமே
உன் தூக்கத்திற்காகவோ என்னவோ தெரியவில்லை – என்
உயிர் நாடியும் துடிக்கும் இதயத்துடிப்பாகவே

மேலும்

ராஜேஸ்வரி - ராணிகோவிந்த் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 11:35 am

நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து சென்றால் என்ன செய்வது?
ஆலோசனை கூறுங்கள்

மேலும்

புரிந்து கொள்ளாதவரை நேசிப்பது கடலில் கரைத்த பெருங்காயம் போல நீ எவ்வளவு நேசித்தாலும் பயன் இல்லை உனக்கு காயம் மட்டுமே மிச்சம் 06-Apr-2015 2:57 pm
உண்மைதான் தோழியே... 06-Apr-2015 2:52 pm
இது கணினி உலகம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட வார்த்தைகளை வைத்து ஒருவரை துல்லியமாக மதிப்பிட முடியாது நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 06-Apr-2015 2:50 pm
உண்மைதான் தோழி, ஆனால் நேசம் என்பது தகுதியை பார்த்து வருவதில்லையே... 06-Apr-2015 2:48 pm
ராஜேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 4:00 pm

வாழ்கையில் வலிகளை
மறக்க வேண்டும் என
நினைப்பதை விட!
நினைக்க வேண்டும்
என்பதை மறந்து
விடுவது மேல்!

மேலும்

சிறப்பு 14-Apr-2015 5:29 pm
நன்று ! 17-Feb-2015 12:05 am
நன்று 16-Feb-2015 11:24 pm
ராஜேஸ்வரி - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 3:25 pm

எனை காண வந்தவரெல்லாம்
முகம் சுளிக்கும்போதும்
வாரிஎடுத்து முலைப்பால்
ஊட்டியவளே என்
முதல் கடவுள்!

மேலும்

நன்றி தோழரே... 11-May-2015 10:31 am
நன்றி தோழரே.... 11-May-2015 10:31 am
குட் 06-Feb-2015 11:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (53)

user photo

A.K.ரங்கநாதன்

உத்திரமேரூர் (காஞ்சிபுரம
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (52)

user photo

A.K.ரங்கநாதன்

உத்திரமேரூர் (காஞ்சிபுரம
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே