எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்* வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்...


*படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்*

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதோ ஒரு அனுபவத்தை உள்வாங்கிக் கொள்கிறார் ஒரு மனிதர்...

காணும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு ரசனையைப் பதிக்கத் தொடங்குகிறார் ஒரு கவிஞர் ..

ஒரு உளி அறிந்து இருக்குமா , தான் உடைத்துக் கொண்டிருப்பது ஒரு பாறையை அல்ல .. தான் செதுக்கிக் கொண்டிருப்பது ஒரு சிற்பத்தை என்று... ஒரு கண்ணாடிச் சதுரத்துக்குள் ஒளிந்திருக்கும் சிறு கோடுகளுக்குத் தெரியுமா அவை வெறும் வண்ணக் கலவைகள் அல்ல , ஓவியங்கள் என்று...

வெறும் பாறையையும் சிற்பமாகப் பார்க்கும் , சிறு சிறு கோடுகளையும் ரசனையோடு நோக்கும் பார்வை ஒரு படைப்பாளிக்கே சொந்தமானது....

அந்த வகையில் , ஒரு படம் இங்கு கவிதையாகப் போகிறது...

ஆம் நண்பர்களே...

*படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்* - இது ஒரு கவிதைப் போட்டி...


மழலையும்

மழையும்

பிறை நிலவின் குளிரும்

அனல் சூரியனின் வியர்வைத் துளியும்

ஆனந்தத்தின் கண்ணீரும்

வறுமையின் சிகப்பும்

விழா நாளின் கோலாகலமும்

தனிமையின் விரக்தியும்

என்று வாழ்வின் இயல்பினங்கள் ஒவ்வொன்றும் பாடுபொருளே ஒரு கவிஞருக்கு... காணும் காட்சி ஒவ்வொன்றிலும் கவிதையைக் காணும் கவிஞருக்கு , இங்கு ஒரு காட்சியைத் தாங்கிய படம் இன்று கவிதையாகப் போகிறது...

ஆம் நண்பர்களே...

போட்டிக்கென்று ஒரு படம் பதிவு செய்யப்படும்... அந்தப் படத்திற்கென்று தோழர்கள் கவிதை எழுத வேண்டும்...

போட்டிக் கவிதைக்கான தலைப்புக்கள் முழுக்க முழுக்க தோழர்களின் தேர்வே... தோழர்களின் விருப்பமே... குறிப்பிட்ட படத்துக்குப் பொருந்துமாறு கவிதைகள் படைக்க வேண்டும் தோழர்கள்...

போட்டி நடைபெறப் போவது மூன்று நாட்கள்... வரும் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்... போட்டி நடந்து முடிந்த ஐந்தாவது நாளில் போட்டிக்கான தீர்ப்புகள் , வெற்றி பெற்ற கவிதைகள் அறிவிக்கப்படும்....

போட்டி குறித்த முழு விபரங்கள் இன்னும் தெளிவாக நாளை வெளியிடப்படும்...

காணும் காட்சிகள் ஒவ்வொன்றையும் கவிதைகளாக்குவோம் .. வாருங்கள் தோழர்களே...


நேசத்துடன்
கிருத்திகா தாஸ் ..

நாள் : 6-May-15, 9:44 am

மேலே