எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்காக மாலை தொடுத்தேன் என் நந்தவன மலர்கள் கொண்டு...

உனக்காக

மாலை தொடுத்தேன்

என் நந்தவன

மலர்கள் கொண்டு



உனக்காக

மலர்கள்

படைக்கிறேன்

என் இதழ்கள்

கொண்டு



இதழ்களில்

தவழ்வது

பனித்துளி அல்ல



உன் ஸ்பரிசமெனும்

மோட்சம் காண

தவமியற்றும்

என் உயிரின்துளி



வலிகளை மனதோடு

மறைத்து

மலர்களை

பரிசளிக்கிறேன்



என் காதல்

நீ ஏற்பாயென்று.

பதிவு : ராஜேஸ்வரி
நாள் : 8-Apr-18, 8:10 pm

மேலே