ராஜேஸ்வரி- கருத்துகள்

அருமையான படைப்பு

"என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....! "

உண்மையான வரிகள்

நல்ல கதை, கதை ஆரம்பித்த விதம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைப்பதை இருந்தது நன்று.

குழந்தை சொல்லி கொண்டிருக்கும் போது ரமேஷ் அங்கிள் வந்திருந்தால் முடிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (ஒன்று ரமேஷ் அங்கிள் திருந்தியிருக்க வேண்டும் அல்லது அவருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்க வேண்டும்)

இருப்பினும் கதை அருமை, சமூகத்துக்கு தேவையான கருத்து. நல்ல ஆரம்பம் இன்னும் பல படைப்புகளை தர வாழ்த்துகிறேன்.

போட்டிக்காக காத்திருக்கிறோம் தோழி

அருமையான கவிதை தோழரே
கவிதை படிக்க படிக்க
எனக்கு பக்கத்து வீட்டு குழந்தை
ஞாபகம் வருகிறது

அருமையான கவிதை வாழ்த்துக்கள் தோழி

வார்த்தைகளின் சிக்கனம்
தானே ஹைக்கூ!
அப்படி என்றால்
இது சிக்கனமா?
சோம்பேறித்தனமா?

இனி வரும் தலைமுறைகளுக்காவது சிறந்த கல்வி கிடைக்க வேண்டும்


யாருக்கும் தொியாத
உங்களின் மறுபக்கம்
யாருக்கும் தொியாமலே
போய்விட்டால்
நீங்கள் யாா்?

"நான் நல்லவளாக இருந்தால் நான் பாவம்
நான் கெட்டவளாக இருந்தால் மற்றவர்கள் பாவம்"

எல்லோர்க்கும் தொிந்த
உங்களை பற்றிய ஒன்று
உங்களுக்கு தொியாமலிருந்தால்
நீங்கள் யாா்?

"முட்டாள்"

உங்களுக்கும் தொியாத
மற்றவா்களுக்கும் தொியாத
நீங்கள் யாா்?

"ஆன்மா"

நிறம் வேறு அழகு வேறு

கருப்பு நிறம் அழகு என்று
உதட்டில் பேசுபவர்களில்
பல பேர் தன் குழந்தைகளை
வெள்ளையாக்க நினைகின்றனர்

இது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று
ஒரு நாளில் மாற்ற முடியாதது
யாரும் மாற்ற முயலாதது

மாற்ற நினைத்தாலும்
அந்த எண்ணம்
கால ஓட்டத்தில்
அடித்து செல்லப்படுகிறது

பள்ளி செல்லும் சிறுமி
தான் வெள்ளையாக
வழி கேட்கிறாள்

வெள்ளை என்பது நிறம்
அழகு அல்ல என்று
சொன்னாலும் புரியவில்லை

பிஞ்சு நெஞ்சில் நஞ்சை
விதைத்திருக்கிறார்கள்
யாரை குற்றம் சொல்வது!


தூக்கு கயிறு
உங்களுக்கு ஒரு நிமிடத்தில்
விடுதலை தந்து விடும்

ஆனால் விருப்பமில்லாத
திருமணம்
பெண்ணுக்கு தருவது
தாலி கயிறு அல்ல
விடுதலை இல்லாத தூக்கு கயிறு

காலம் மாறிகொண்டிருகிறது
இதற்கு ஒரு நாள் அவர்கள்
விலை தர வேண்டி இருக்கும்
அந்த நாள் தொலைவில் இல்லை நண்பரே

புரிந்து கொள்ளாதவரை நேசிப்பது
கடலில் கரைத்த பெருங்காயம் போல
நீ எவ்வளவு நேசித்தாலும்
பயன் இல்லை
உனக்கு காயம் மட்டுமே மிச்சம்

இது கணினி உலகம் மட்டுமல்ல
ஆபத்தானதும் கூட
வார்த்தைகளை வைத்து
ஒருவரை துல்லியமாக மதிப்பிட முடியாது
நாம்தான் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும்

உன்னை புரிந்து கொள்ளாதவர்
உன்னை நேசிக்க முடியாது
உன் நேசத்தை அவருக்கு
புரிய வைப்பதற்கு பதில்
அவர் அதற்கு தகுதியானவரா
என்று யோசி


ராஜேஸ்வரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே