கருப்பா நான் பொறந்தேன்

நான் கருவிலே உருவான போது
பெண்ணாய் பிறப்பேனென்று
யாரும் ஆருடம் சொல்லலையோ
குங்குமப்பூ குடிக்கலையோ
பாட்டி அவள் சொல்லலையோ
பாவி நீயும் கேட்கலையோ?
பகலிலே பிறந்தாலும்
இருட்டா பிறந்தேன்னு
சொந்த பந்தம் பேசலையா
சுத்தி நின்னு சிரிக்கலையா?
கடலை மாவு, பயத்தமாவு
பேபி சோப் இத்யாதி...
சந்தையிலே விற்கலையா
உன் சிந்தைக்கு தான் தோனலையா?
கிடா வெட்டி படையல் போட்டு
குல சாமிக்கு பூசப் போட்டு
ஆசையா நீ வச்சப் பேரு
அய்யோ அது விளங்கலையே
வீதியில சந்தையில
விளையாடப் போகயில
கருப்பின்னு ஒரு பேரு
கப்புன்னு தான் ஒட்டிக்கிச்சு...
செவத்த பிள்ளை கூட்டத்தில
சேர்ந்து விளையாட
கருத்தப் புள்ள எனக்கு தான்
அய்யோ இடங்கிடைக்கலையே....
கருத்து தெறிந்த பின்னே
கண்ணாடி முன்ன நின்னு
நா கதறி அழுத கத
யாரும் அறிந்திருக்க நியாயமில்ல
அழுக்கா இருக்குமுன்னு
ஆறு முறை சோப்பு போட்டும்
துளியும் வெளுக்கலையே
பாவப்பட்ட என் கருப்பு தோலு....
நல்லா நா படிச்சும்
மொத மார்க் நா எடுத்து
செவத்த பொண்ணு
செவ்வந்தி லீடரான
கதையும் உண்டு
எதிர் வீடு அத்தக்காரி
அம்மாவோட சண்ட போட்டு
காக்காவ பெத்தவன்னு
நையாண்டி செய்ததுண்டு
பத்தாப்பு படிக்கையில
குரூப் போட்ட எடுக்கையில
செவத்த பொண்ணு கூட்டத்துல
இந்த கருங்குருவி மறஞ்சிடுச்சி
மூக்குறிஞ்சி அழுதுடுச்சி....
காலேஜ் போகையிலே
கொல்லங்குடிகருப்பாயி
வந்துட்டான்னு சொல்லி சொல்லி
என் வயச நொறுக்கி
வலிய கொடுத்த
பாவி மக்க கூட்டத்தில
புழுவா நெளிஞ்சி
நாணலா வளஞ்சி
என் தேகம் சுருங்கிடுச்சி
கல்லுரி காலத்தில
கலர் கலரா கனவு இல்ல
காதல் மோதல் நட்பும் இல்ல.....
தீண்டத் தகா ஜென்மமாய்
சடமாய் படித்து வந்தேன்
கல்யாண சந்தையிலும்
கண்டிப்பா விலையில்ல....
கருங்குரங்கு மாப்பிள்ளையும்
என்ன கருப்புன்னு ஒதுக்கி போனான்
கருப்பா பொறந்தாலும்
கற்போடு தானிருக்கேன்னு
காரித்துப்பி சொல்லப் போறேன்...
தப்பிருந்தா சொல்லிடுங்க

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Mar-15, 6:14 pm)
பார்வை : 708

மேலே