கோட்டோவிய மழலைகள் -22
![](https://eluthu.com/images/loading.gif)
கோட்டோவிய மழலைகள்
குதலை மொழிக் குருவிகள்
பாட்டாகிய கவிதைகள்
பத்துத் திங்களின் நிலவுகள்
காட்டாறென தளிர் நடை
களி சேர்த்திடும் குறு நகை
கேட்டாயிரம் சுகம் வரும்-மனுக்
குலம் வாழ்ந்திட வழிதரும்.
காற்றாடிடும் மலர் வனம்
கலி தீர்த்திடும் பெருவனம்-உணர்வு
ஊற்றாகிய உறைவிடம்-நம் உயிர்
வாழ்ந்திடும் இருப்பிடம்.
பொய்யா மொழிப் புலமைகள்
பிணி போக்கிடும் புதுமைகள்
வையாதீர் அவை வாடிடும்
வைரங்கள் ஒளி மங்கிடும்
பூப்போல் நிறம் காட்டிடும்
புலர் காலையின் இளஞ்சூரியர்
காப்போம் கண் மணியென- உலகை
மேய்ப்பார் நாளை இவர் ஆதலால்..