நீ சுண்டைக்காய்

கிடைப்து டீ என
மனமுவந்துப் பருகு.

நடப்பது நீ என
எரிபொருளை தவிர்.

பசியது தீ தான்
விடியும்நாள் சீக்கிரம்.

காலியது பை ஏன்
இனியாவது சேமி.

கேட்பதா சீ. பின்
என்செய்ய கடன் கேள்.

திட்டமிடு வா. யோசி
சீக்கிரம் திருப்பித் தர.

உன்னவள் பூ நாளை
பிறந்தநாளா கவலைவிடு.

கப்பல் பரிசு தா. வண்ணக்
காகிதத்தில் செய்து.

படம்பார்க்க போ. பணமில்லையா
பூனையோடு நேரத்தைப் பகிர்.

மாசக்கடைசியே நீ சுண்டைக்காய்
கவலைப்படுத்த முடியாதென்னை.

சவால் விடு நீ சவால்.வாழ்க்கை
என்ன என யோசிக்காதே. வாழ்.
--கனா காண்பவன்.

எழுதியவர் : கனா காண்பவன் (25-Mar-15, 9:46 pm)
பார்வை : 88

மேலே