மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை குறைக்க மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக, காஞ்சிபுரம் ஆட்கோ அவென்யூவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் சர்.சி.வி.ராமன் துளிர் இல்ல மாணவர்களான லெஷ்மி, தரணி, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் நகரில் சரியான கட்டமைப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் அடையும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பெரும்பாலான கட்டமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை. சாலைகளின் நடைமேடை பலர் ஆக்கிரமித்துள்ளதால், சாதாரண மனிதர்கள் வாகனம் செல்லும் சாலைப்பகுதியில் இறங்கி எளிதாக கடப்பதாகவும், தங்களால் இயலவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் கூறுவதாக தெரிவித்தனர். குறிப்பாக அலுவலகம், மருத்துவமனை, வீடுகள், வணிக கடைகள் அனைத்திலும் முகப்பு வாயிலின் படியை கடப்பதிலும், அடிக்குமாடி படியினை கடப்பதிலும் சிரமப்படுகிறார்கள். கழிவறைகளை பயன்படுத்துவதிலும் சிரமப்படுகிறார்கள். நடைமேடை, பேருந்து நிறுத்தம், பேருந்து நிலைய பயணியர் அமரும் இடம் இவைகளின் கட்;டமைப்புகளில் முகப்பில் ஏறும்போது சிரமப்படுகிறார்கள். கோவில்கள் முகப்பு படிகள் மாற்றுத் திறனாளிகள் ஏற வசதியாக இல்லை. அதேபோல் ஆலயங்களின் உட்புறம் நுழைவாயில்கள், தரிசன வழிகளை கடப்பது கடினமாக உள்ளது என்றும், அவைகளில் மாற்றங்கள் வேண்டும் என்றும் கூறினர்.

எனவே இக்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கேட்டபோது, வணிகக் கட்டடங்கள், அலுவலகம், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில், சாலையில் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகளில் வணிக்கடைகள், கேலிக்கை கட்டடங்கள் உட்பட பலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். அதனால் சாதாரணமாக நடந்து செல்பவர்கள் வாகனங்கள் செல்லும் சாலைகளில் இறங்கி கடந்து செல்கிறார்கள். ஆனால் ஊனமுற்றோர்கள் வாகனம் செல்லும் சாலையில் செல்வது கடினம். ஆகையால் நடைமேடையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், பழுதுகளால் சிரமப்படுகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். நடைமேடையில் ஏறுவதற்கு வசதியாக பக்கவாட்டு அமைப்புகள் சாய்வு தளத்தில் தரைவரை இறங்க வேண்டும். நடைமேடையின் பக்கவாட்டில் பிடிப்பு கம்பி பொருத்தப்பட்டு, அதில் கண்பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் சில குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும். அதாவது மாவட்டம், அப்பகுதி, செல்லும் தெரு, அடுத்த தெரு, எந்த திசை கண்பார்வையற்றோர் தொட்டு உணரும் விதத்தில் சில குறியீடுகள் கொடுக்கப்பட்டு, அதில் பதியப்பட வேண்டும். அப்படி பதியப்பட்டால் அதனை தொட்டு உணரும் கண்பார்வையற்றோர் எந்த மாவட்டத்தில் எந்த இடத்தில் உள்ளோம் என்பதை அறிவர். அடுத்து எந்த பகுதிக்கு எந்த திசையில் செல்கிறோம் என்பதையும் உணர்வர்.

ரயில்வே நிலையங்களில் உள்ள முகப்பு நுழைவாயில் படிகள், ஓவர்பிரிட்ஜ் மற்றும் சப்வே படிகட்டுகளில் ஏற சிரமப்படும் மாற்றுத் திறனாளிகள் கடப்பதற்கு வசதியாக சாய்வு தளமாக அமைக்கப்பட வேண்டும்.

அடுக்குமாடி கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக கட்டாயம் (வீடுகளில் குறைந்தது 2 மாடிக்கு, அலுவலகம், வணிக கடைகள், தொழிற்சாலைகள் என்றால் ஒரு மாடி என்றாலே) லிப்ட்; வசதி இருக்க வேண்டும். அதில் எத்தனையாவது மாடிக்கு வந்துள்ளோம் என்பதை குறிக்க வசதியாக ஒளி-ஒலி அமைப்பு இருக்க வேண்டும். கண்பார்வையற்றோருக்கு ஒலி அமைப்பு சவுண்ட் மூலமும், காது கேட்காதவர்களுக்கு ஒளி அமைப்பு கலர்லைட் மூலமும் எந்த மாடிக்கு வந்துள்ளோம் என்பதை வெளிப்படுத்தும். கழி;வறைகளில் கால் ஊனமுற்றோர்கள், கண் பார்வையற்றோர்கள் உட்பட பயன்படுத்துவதற்கு எதுவாக கட்டமைப்பு வேண்டும். அரசு அலுவலகங்களில் வரிசைக்குரிய அமைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வழி வேண்டும். அப்படி இருந்தால் சாதாரண மக்களோடு மிதிப்படமாட்டார்கள்.

அரசு சார்பில் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட விதிகள் அமைக்கப்பட்டு, அதன்படி கட்;டமைப்புகள் ஏற்படுத்தப்பட்;டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக அவரவர் வீடுகளின் கட்டமைப்புகள் அமைக்கப்பட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதியான கட்டமைப்புகள் இன்னும் ஏற்படுத்தப்பட வேண்டும் என கூறினர். ஆய்வினை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் அச்சடித்து, பொதுமக்களிடையே வழங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் பிரிவில் மனு அளித்து, அப்போது மாவட்ட வருவாய் அலுவலரிடம் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கும்படி ஆய்வு குறித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

எழுதியவர் : மாணவர்கள் (13-Nov-17, 4:34 pm)
சேர்த்தது : A.K.ரங்கநாதன்
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே