காஞ்சிபுரம் திருக்காலிமேடு குளங்கள் சீரமைக்க வேண்டி மாணவி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை

காஞ்சிபுரம் திருக்காலிமேடு குளங்கள் சீரமைக்க வேண்டி காஞ்சிபுரம் பள்ளி மாணவி அங்களா பரமேஸ்வரி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், நாங்கள் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள பழமை வாய்ந்த 2 குளங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். அந்த ஆயிவில் முற்காலத்தில் சின்ன வேப்பங்குளம் குடிநீருக்காகவும், பெரிய வேப்பங்குளம் மக்கள் குளிக்க, துவைக்க, கால்நடைகள் உபயோகம் உட்பட இதர தேவைகளுக்காகவும் 2 ஆக பிரித்து குளங்களை வெட்டி பயன்படுத்தி உள்ளனர். ஆனால் தற்போது இரு குளங்களும் அகலம், நீளம், ஆழம், குறைந்து ஆக்கிரமிப்பாலும், தூர்வாரப்படாமல் கிடப்பில் போட்டுள்ளதாலும் பொலிவிழந்து உள்ளது. குளத்தில் அமைக்கப்பட்ட கிணறு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. குளத்தில் முள் மரம், மரக்கட்டைகள், கோரைகள், பாசிகள் உட்பட நீர்வாழ் தாவரங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அருகிலுள்ள சாக்கடை கழிவுகள் செல்லும் கால்வாய்க்கும், குளத்திற்கும் குறுஇணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு, சாக்கடை கழிவுகள் கலப்படமாகும்படி செய்யப்பட்டுள்ளது. குளத்தின் நீர் ஒருவித பழுப்பு நிறத்தில், துறுநாற்றத்துடன் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது. குளமே பராமரிப்பின்றி, பெரும் சேதமடைந்து அழிந்து வருகிறது.
எங்கள் ஆய்வில் 'நாங்கள் ஆய்வு செய்த 2 குளங்களும் இன்று பராமரிப்பு இன்றி, மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. அப்பகுதியின் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான நீராதார பற்றாக்குறைக்கு இக்குளங்களின் பராமரிப்பின்மையே முதன்மையான காரணம் ஆகும்" என்பதை ஆய்வில் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளனர்.
ஆகையால் மேற்படி 2 குளங்களையும் சீரமைத்து கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சனை வராமல் இருக்க வழிவகை செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கையை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அம்மாணவி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுதியவர் : பி.அங்காள பரமேஸ்வரி ஆய்வு (8-Nov-19, 4:23 pm)
சேர்த்தது : A.K.ரங்கநாதன்
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே