துப்புரவு பணியில் புதிய யுக்தியை பயன்படுத்த காஞ்சிபுரம் துளிர் இல்ல மாணவி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை

துப்புரவு பணியில் புதிய யுக்தியை பயன்படுத்த காஞ்சிபுரம் துளிர் இல்ல மாணவி பரிமளா, மேகனா ஆகியோர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதில் நாங்கள் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்க காஞ்சிபுரம் நகராட்சியின் துப்புரவு பணியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.
அந்த ஆயிவில் நகராட்சி நிர்வாகத்தில் களப்பணியாற்றும் துப்புரவாளர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. கூலிக்கு ஆள் அமர்த்தி பணியாற்றுவதால், பொறுப்புடன் பணியாற்றும் நபர்கள் குறைவு. சரியான காலநிலையில் பணியாற்ற தவறுவதால், குப்பை தொட்;டிகளில் குப்பைகள் நிரம்பி சிதறி கிடக்கும் நிலை பெரும்பாலும் பார்க்க முடிகிறது. வீதிகளுக்கு ஒரு குப்பை தொட்டி இல்லாமல் சில வீதிகளுக்கு ஒரு குப்பைத் தொட்டி என வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சரியான நேரத்தில் அகற்றாமல், நிரம்பிய கழிவுநீர் வெளிப்புறத்தில் வழிந்தோடும் சூழ்நிலை உள்ளது. கொசு மருந்து தெளிப்பது என்பது அரசியல் கட்சி கூட்டம், அமைச்சர், உயர் அதிகாரிகள் வருகை, டெங்கு பாதிப்பு போன்ற அவசர நிலையின் போது செய்யும் செயலாக மட்டும் உள்ளது.
மறுசுழற்சி செய்யும் முறையில் உரமாக மாற்றுதல், பழக்கழிவில் மின்சாரம் தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவுகள் அரைத்து மறுசுழற்சி அனுப்புதல் போன்றவை வரவேற்கத்தக்கது. ஆனால் சேகரிக்கும் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் முன், சம்பந்தப்பட்ட திருவீதிபள்ளத்தில் ஆங்காங்கே வெளிப்புறத்தில் கண்டபடி கொட்டி, கழிவுநீரோடு சேர்ந்து துர்நாற்றம் வீசும்படி உள்ளது. மறுசுழற்சி செய்யப்படும் பகுதியில் துர்நாற்றம் பெருமளவு உள்ளது. பணியாற்றும் நபருக்கு நோய் வர அபாயம் அதிகம். மறுசுயற்சி பணிகள் சுலோவாக நடைபெறுவதால் குப்பைகள் மலை மலையாக சேர்ந்துக் கொண்டே போகிறது.
ஆய்வின் தீர்வாக 'நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணிக்கு வரையறுத்த திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், அதனை செயலாக்கம் செய்வதில் சுணக்கமும், நிர்வாக குறைபாடும் உள்ளது. மேலும் துப்புரவு திட்டத்தில் காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்களும், தேவையான பொறுப்பான பணியாளர்களும் அவசியமாகிறது" என்பதை அறிந்தோம்.
ஆகையால் நகராட்சி நிர்வாக துப்புரவு பணி மேம்பட, புதுவித யுக்தியை ஒரு மாதிரியாக எங்கள் குழு வழங்கியுள்ளது. அவை, ஒவ்வொரு தெருவிலும் புகார் பதிவு செய்ய ஒரு தொழிற்நுட்ப கருவி இருக்கும். அதில் பச்சை, சிகப்பு, நீளம் என 3 நிறத்தில் பட்டன் இருக்கும். பச்சை எப்போதும் ஒளிரும். எதாவது துப்புரவு தேவைப்பட்டால் அப்பகுதி மக்களில் யாரேனும் ஒருவர் நீளநிற பட்டனை அழுத்தியவுடன், நகராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப கருவியில் நீளநிற பல்பு ஒளிரும் உடனே சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளர் வந்து, பணியாற்றுவார். பணி முடிந்ததும் பச்சை நிற பட்டனை அழுத்தி பணி முடிக்கப்பட்டது என தெரியப்படுத்த வேண்டும். சிகப்பு நிறம் அவசர நிலையும், நீளம் சாதாரண துப்புரவும், பச்சை புகார் இல்லை என்பதையும் குறிக்கும். 3 பட்டனையும் புகார் அளிக்க அல்லது முடிக்க அழுத்தும் போது, முதலில் அடையாள எண் கேட்கும், அதில்; ஆதார் அல்லது வாக்காளர் அட்டை எண்ணை பதிவு செய்தால் பட்;டன் செயல்படும். இதுதொடர்பாக புகார் அளித்த நபர்களின் பெயர், பகுதி, நாள், நேரம், வேலை முடித்த நேரம் உட்பட அனைத்து தகவலும் நகராட்;சி கணினியில் பதிவாகும். அந்த அளவிற்கு தொழிற்நுட்ப மெஷின் பொறுத்தப்பட வேண்டும். இதில் புகார் வெளிப்படையாக உயர் அதிகாரி அறியமுடியும். அதேபோல் நகராட்சி முக்கிய தகவலை இத்தொழிற்நுட்பம் மூலம் உடனே தெரிவிக்கலாம் என கூறினர்.
துப்புரவு பணி குறித்து ஆய்வு செய்து, புதுயுக்தியை இக்காலத்திற்கு ஏற்ப வழங்கி, அதனை செயல்படுத்த முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது பாராட்டதக்கது.

எழுதியவர் : பரிமளா ஆய்வு குழு (8-Nov-19, 4:30 pm)
சேர்த்தது : A.K.ரங்கநாதன்
பார்வை : 107

மேலே