உடற்கு வருமிடர் நெஞ்சு பரத்துற்றோர் நடுக்கமுறார் - நன்னெறி 29

நேரிசை வெண்பா

உடற்கு வருமிடர்நெஞ்(சு) ஓங்குபரத்(து) உற்றோர்
அடுக்கும் ஒருகோடி யாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியைமதி மான். 29 - நன்னெறி

பொருள்:

இசையை ஒத்த குளிர்ந்த பேச்சுடையவளே!

நிலவில் இருக்கும் மான் பூமியில் இருக்கும் புலிக்கு அஞ்சுமோ?

அது போல நெஞ்சத்தை உயர்ந்த பரம்பொருளிடம் வைத்தோர் உடலுக்கு ஒரு கோடி துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் கவலைப்பட மாட்டார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-19, 2:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே