எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் பயன்படுத்தப்படுமா? மாணவர் ஆய்வு வெளி...

  மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் பயன்படுத்தப்படுமா?

 மாணவர் ஆய்வு வெளி செல்லும் உண்மைகள்   

இந்த ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குழு மூலம் வழங்கப்பட்ட “மாற்றுத் திறனாளிகளின் செயல்பாட்டிற்கு உதவும் அம்சங்களோடு கூடிய நிலைப்புரு மேம்பாட்டிற்கான  அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள்”என்ற கருப்பொருளில், ‘’ஆற்றல்” என்ற துணை கருப்பொருளில், மாற்றுத் திறனாளிகளின் உழைப்பை அவர்களின் வளர்ச்சிக்கும், அதன் விளைவாக நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆய்வினை மேற்க்கொண்டோம்.   எங்கள் ஆய்வுத் தலைப்பான ’’மனித ஆற்றலில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு -ஓர் ஆய்வு’’ என்ற தலைப்பிற்கு ஏற்றவாறு நெட்டேரி, வினாயகபுரம், ஒலிமுகமதுப் பேட்டை, வெள்ளைக் குளத்தெரு, கீழ் அம்பி,  சிறுகவேரிப்பாக்கம் உட்பட்ட பகுதிகளை தேர்வு செய்து ஆய்வினை மேற்கொண்டோம்.   முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகளிடம் தகவல் சேகரிக்கும் பொருட்டு 10 வினாக்கள் கொண்ட வினாப்பட்டியல் ஒன்று தயாரித்து, அதன் மூலம் உரிய தகவல்களை சேகரித்தோம். பின்பு மாற்றுத்திறனாளிகளிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதிகளை நேரடியாக உற்றுநோக்கி அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் போன்ற தகவல்களை குறித்துக் கொண்டோம். மேலும் ஆய்விற்கான ஆதாரங்களை புகைப்படம் எடுத்துச் சேகரித்தோம்.   ஆய்வின் முடிவில் மாற்றுத்திறனாளிகள் வைத்துள்ள  இலட்சியத்தை அடைய பல்வேறு தடைகள் இருந்ததைத் தெரிந்துக் கொண்டோம். அவர்களுடைய இலட்சியங்களாக கூறும் பொழுது விவசாயம், ஆசிரியர், காவலர், வழக்கறிஞர், பொறியாளர் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு லட்சியங்களை கூறினார்கள். ஆனால், அவர்கள் லட்சியங்களை அடைய தடையாக இருப்பதாக ஏழ்மை நிலை, கல்வியின்மை, சமுதாய ஒதுக்கீடு போன்றவற்றை கூறினார்கள்.   தற்பொழுது செய்யும் வேலைகளாக தையல்காரர், ஆசிரியர், சுயத்தொழில், பாதுகாவலர், கணிப்பொறியாளார் மற்றும் நூலகப் பாதுகாவலர் என பலபணிகளை மேற்கொள்வதாக சிலர் கூறினார்கள். மேலும் ஒரு சிலரால் வேலைகள் பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளதாக கூறினார்கள். மேலும் அவர்களில் 20% பேர் இலசியத்தை அடைய முடிந்ததாகவும், 80% பேர் இலட்சியத்தை அடைய முடியமல் இருப்பதாகவும் கூறினார்கள். இலட்சியத்தை அடைவதற்கு தடையாக தங்களின் ஊனத்தையும், முயற்சியின்மை, பள்ளியில் சேர்க்கவில்லை, வாகன வசதியில்லை, குடும்ப சூழ்நிலை போன்றவற்றை கூறினார்கள்.   மாற்றுத்திறனாளிகள் தங்கள் எதிர்பார்ப்பாக மக்கள் அனைவரும் எங்களிடம் பேச வேண்டும், எங்களை ஒதுக்கக் கூடாது, எங்களை அனைவரும் மதித்து, தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும் என கூறினார்கள். அரசாங்கத்திடம் ஒரு சிலர் உதவித் தொகை பெறுவதாகவும், வண்டிகள் பெற்றதாகவும் கூறினார்கள். மேலும் ஒரு சிலர் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு சலுகைகளும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்கள். மேலும் அரசாங்கத்திடம் அவர்கள் இட ஒதுக்கிட்டிற்கு முன்னுரிமை, கடனுதவி, சிறுதொழில் பயிற்சி போன்றவற்றை எதிர்பார்ப்பதாக கூறினார்கள். அவர்களின் வேலைகளில் அரசுத்துறையில் 30% பேரும், தனியார் துறையில் 5% பேரும், சுயத் தொழில் 2% பேரும், இதிலிருந்து 37% பணியிலும், தற்காலப் பிழைப்பாக 53% பேர் வேலையிலும், 10% பேர் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள்.   ஆய்வு தீர்வாக பார்க்கும் பொழுது “மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றும் அரசின் அலட்சியத்தால் மாற்றுத்திறனாளிகளின் ஆற்றலனாது பயன்படுத்தபடாமல் வீணடிக்கப்படுகிறது’’ என்பது உறுதியாகிறது. அதுமட்டுமின்றி குறிப்பாக “அவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளும், சிறுத்தொழில் மேற்கொள்ள கடனுதவிகள், படிப்பறிவு அல்லாததால் அவர்கள் ஆற்றல் வீணாகிறது’’ என்பது தெளிவாகிறது. அவர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்க அரசும் இதனை மேற்கொள்ள் வேண்டும்.   எங்கள் குழு வழங்கிய ஆலோசனையாக, மக்களின் ஆற்றல் பயன்படுத்துவது போல மாற்றூத்திறனாளிகளின் ஆற்றலும் முழுமையாக பயன்படுத்த அரசு திட்டமிடவேண்டும்.  மாற்றுத்திறனாளிகளின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி அவர்களின் இலக்கை அடைய துணை நிற்கும்படி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல். அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு தரவேண்டும். சுயதொழில் செய்ய கடனுதவி> பயிற்சி> வழிகாட்டல் ஆகியவற்றில் அரசு முன்னுரிமைக் கொடுக்க  வேண்டும்.  மக்களும் அவர்களை ஏளனமாக பார்க்காமல், அவர்களை ஒதுக்கி விடாமல் தனது உடன் பிறப்பாக, நண்பர்களாக சகஜமாக பழகவும், மக்களுக்கு அதனைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.   மேற்படி வழிகாட்டுதல்களை  செயல்படுத்தினால் மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் முழுவதும் அவர்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும் நாட்டின் சமூக முன்னேற்றத்திற்கும் உதவியாக  இருக்கும் என்பதில்  சந்தேகமில்லை.            

நாள் : 8-Nov-17, 4:59 pm

மேலே