ஜெயகவி
ஆடை முடிவில் ஜரிகை மிளிரும்.
ஆசை எல்லாம் அதிலே தொடரும்.
நிமிர நிமிர நிறமும் பெருகும்.
நிமிர்ந்த பின்பு இறங்க மறுக்கும்..
கொண்டை பூவில் என்ன கொண்டாய்?
கொல்லும் ஆயுதம் ஆயிரம் கொண்டாய்.
அதற்கு கூட அபிநயம் தந்தாய்.
ஆடும் போதே ஆட்டியும் வைத்தாய்.
சிக்கல் வார்த்தைகள் ஆயிரம் இல்லை.
மனதை குழப்பும் பாவனை இல்லை.
பட்டதை பட்டென திட்டமாய் சொல்லிடும்
நெற்றியை உன்னிடம் மட்டுமே பார்க்கிறேன்.
சலங்கையும் கண்களும்
பரிமாறும் மொழிகளில்
என் விழி செய்தியை
எப்படிச் சொல்லுவேன்.
ஆயிரம் கண்களும்
பார்க்கும் உன் ஆடலை
நான் மிகையாய் ரசிப்பதாய்
எப்படி காட்டுவேன்.
மிடுக்கென எழுந்து ராஜ்ஜியம் ஆள்கிறாய்.
அழகாய் அமர்ந்து வீணையும் மீட்டினாய்.
சிறுமியாய் சிரித்தாய், எதிரியாய் முறைத்தாய்.
தீயால் எரியும் தேகமாய் கொதித்தாய்.
வெத்தலை மெல்கிறாய். ஏழையாய் அழுகிறாய்.
நடராஜர் புகுந்த பார்வதி ஆகினாய்.
மயிலும் ஆடிடும் மயிலாய் ஆடினாய்.
நீரில் குளிக்கும் பறவையாய் மாறினாய்.
உன் பரத சுரதம் ஊட்டி
என் விரதம் முடித்து வைத்தாய்.
பொதி பொதியாய் அழகு பூவை
என் மேலே வீசி சென்றாய்.
சிற்சிறையிலே என்னை அடைத்து
திக்குமுக்காக்கிய அப்பெண்ணை
நினைவு கிடங்குகளின் ஓர் மூலையில்
சில போதையாய் வைத்து விட்டேன்.
இதய விசும்பலை அடக்கி கொண்டு
ரசிகனாய் மட்டும் அவளை பார்க்க
ஆணையிட்ட என் மூளையிடும்
மாற்று வழி கேட்டு நின்றேன்.
சொல்லடால் சரியாய் கொண்டு
உன்னாடலை சொல்ல நினைத்து
சுவையின்று இலை வைத்து
பரிமாறி விட்டேன்.
ஜெயமாய் கவி முடிக்க நினைத்து
தவியாய் நான் தவித்த பொழுது
சிந்தையில் தவழ்ந்து வந்ததே உன் பெயர்!
ஜெயகவி!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
