பகீரதியே

[Enter Post Title Here]


பகீரதியே....................(கங்கையின் மாசு)

பகீரதனின் பத்தாயிரமாண்டு தவத்தால்
கங்கோத்ரியில் பிறந்து,
கங்காதரன் சிரசில்
தணிக்கை செய்யப் பட்டு
சமவெளி பயணம் செய்து,
சமுத்திரம் நோக்கி
யாத்திரை செய்பவளே!


மெஹஸ்தனீசால் வர்ணிக்கப்பட்டு
ஹரப்பா நாகரீகத்தின் அடிப்படையாகி
மவுரியர் முதல் முகலாயர் வரை
உருவாக்கப்பட்டு
பாரதமும் வங்காளமும்
வாழ ஆதரமுமாகி,
பல மாநிலங்களுக்கு முதுகெலும்பாயும்
எண்ணற்ற மாவட்டங்களுக்கு
வளமுமானாய்!

ஊரும் பறக்கும் நிற்கும் நடக்கும்
நீந்தும் என உயிர்கள் பலவற்றிற்கு
அடிப்படை தேவையாகி
தேசப் பொருளாதாரத்திற்கு
வழி செய்து
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
கருப்பொருளாகி
கும்பமேளாவிற்கு
பிராதான வடிவுமானாய்!

பாவம் களைந்து
புண்ணியம் சேர
உன்னிடம் கங்காஸ்நானம்
செய்ய பரகதியும் அளித்தாய்
மண்ணின் எல்லா அழுக்குகளின்
கொள்ளுமிடமுமானாய்
எமக்கு வேண்டாத எல்லாவற்றையும்
உன்னிடம் சேர்த்து
யாம் தூய்மையானோம்
உனதழுக்கைக் களைந்து தூய்மையாக்க
இனி எத்தனையாண்டுகள்
பகீரதன்களாய் யாம் தவமிருக்க
பகீரதியே......................?



பகீரதீ= கங்கை
................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (28-Oct-14, 6:42 pm)
பார்வை : 105

மேலே