SATHYATHITHAN.A - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SATHYATHITHAN.A
இடம்:  TRICHY
பிறந்த தேதி :  21-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2012
பார்த்தவர்கள்:  497
புள்ளி:  33

என்னைப் பற்றி...

உள்ளாசைகளின் புதைக்குழி

என் படைப்புகள்
SATHYATHITHAN.A செய்திகள்
SATHYATHITHAN.A - மனோ ரெட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2015 9:32 am

தொண்டைத் தண்ணீர் வற்ற
மேடையில் அவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள்,
நதிநீர் இணைப்பையும்
வற்றிப் போன
ஏரி குளங்கள் பற்றியும்

அரைகுறை ஆடையணிந்த
கவர்ச்சி அழகி ஒருத்தி
கண்ணீர் மல்க
கவிதை படித்துக் கொண்டிருந்தாள்,
கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காகவும்
பெண்ணிய சுதந்திரத்திற்காகவும்

மாடாய் கத்திப் பேசி
களைத்துப் போனதில் கலைந்தார்கள்,
மாட்டுக்கறி வேண்டுமென
ஒரு கூட்டமாகவும்
பசுவதையைத் தடை செய்ய
இன்னொரு கூட்டமாகவும்

கக்கத்தில் சொருகியிருந்த
அக்வாஃபினா பாட்டில் நீரை
அடிக்கடி குடித்து
நெகிழ்வாகப் பேசி அமர்ந்தார்,
நெகிழி ஒழிக்கும் சங்கத்தின்
மூத்த போராளிகளுள் ஒருவர்.

அவர்கள் எல்லாம்

மேலும்

பிளாஸ்டிக் 13-Dec-2016 2:16 pm
நெகிழி என்பதன் பொருள் என்ன .?? 26-Oct-2016 4:56 pm
ரசித்தேன்.. அருமை 24-Oct-2015 6:17 pm
நன்றி .))) 22-Oct-2015 4:14 pm
SATHYATHITHAN.A - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2015 8:23 pm

கடவுளை வைத்து
கொள்கைகள் தைத்து
மதத்தை செதுக்கி
மனிதம் வளர்த்தான்.

வளர்த்த மதமே
தன்னை அழிக்கும்
என்று அவனே
மறந்து போனான்.

கதிரும் காற்றும்
புனலும் அனலும்
வாழ்வை தருவதால்
உருவங்கள் ஆகின.

ஆடும் மாடும்
மண்ணும் மழையும்
உழவ நின்றதால்
கடவுளாகின.

மயிலும் கிளியும்
எலியும் புலியும்
அருகில் இருந்ததால்
துணைகளாகின.

மனிதன் வளர
வரலாறு பிறந்தது.
பங்கிட்டு கொள்ள
சண்டை பிறந்தது.
வஞ்சம் பிறக்க
கதைகள் திரிந்தது.
கதைகள் திரிய
வரலாறு புனைந்தது.

வென்றவனின் கடவுளும்,
ஆண்டவனின் ஆண்டவனும்
உயரந்தவனாக,
தோற்றவன் கடவுளோ
காவல் தெய்வமாய்
மாறி போக!


பிரிவனை பிறக்க,

மேலும்

SATHYATHITHAN.A - சுஜய் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 6:29 pm

உளமதன் கண்ணில்
......உலகம் பார்
களமது கற்கக்
......கற்றுக் கொள்
நலமது தோல்வி
......நேரெதிர் நில்
வளமெது வாழ்வில்
......விரைவே கொள்

முதலெது முடிவெது
......முன்னம் ஆய்
வதமது நெஞ்சில்
......வருதல் கொல்
சிதறுதா எண்ணம்
......சற்றே நில்
பதரிடல் இன்றிப்
......பகுத்து அறி

உன்னில் அறிவில்
......ஒற்றடை அடி
எண்ணில் எழுத்தில்
......ஏறுதல் அறி
கண்ணில் நிலையாய்க்
......கனவது கொள்
மண்ணில் மறையாப்
......பேரது பேண்

ஈரடி எனநீ
......எங்கிலும் செல்
தேரதன் மதிப்பைத்
......திக்கிலும் காண்
ஊரது உன்பேர்
..

மேலும்

படித்து மகிழ்ந்த கவிதை 25-Nov-2015 2:55 pm
தேடித் பிடித்து நிறையக் கவிதைகளை வாசித்துவரும் நண்பருக்கு நன்றிகள் பல !! 10-Aug-2015 12:31 pm
அருமை நண்பா மிக அருமை.நண்பர்கள் கண்களில் படவில்லை போல அழகான சொல்லாடல் கருத்தின்றி கிடக்க மனம் பொருக்கவில்லை 10-Aug-2015 10:55 am
SATHYATHITHAN.A - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 7:07 pm

வரம்புகள் மீறும் தைரியம் எல்லாம்
பழக்கங்கள் தந்தது அல்ல.
நெறிமுறை வகுத்த புத்தகம் எல்லாம்
மேடை பேச்சுக்கல்ல.
உறவுகள் அமைத்த காரணம் எல்லாம்
கொச்சை படுத்த அல்ல.
மூளை நிறுவ தேவை எல்லாம்
யோசிக்காமல் ஏச அல்ல.

அமைதி காக்கும்
இதழ்கள் இரண்டும்
பேச தயங்கியன்று.
பேச்சை முறிக்கவே!!!

இங்கே,
படித்த அறிவிலிகள் மத்தியில்
சந்தனமும் சாக்கடை தான்.
ஒழுக்கம் வெறும் சம்பிரதாயம் தான்,
சுவாரஸ்யம் என்பது வீண் பேச்சு தான்.
தருமம் என்பது சிறிய களவு தான்.
நியாயம் என்பது அகப்படாமல் இருப்பது தான்.
நீதி என்பது தண்டனை தான்.

மேலும்

உண்மைதான் நல்ல உணர்த்தல்கள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 6:49 am
SATHYATHITHAN.A - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 6:57 pm

விழுங்கிய சொற்கள் எழுந்தன
இடறிய கற்கள் நெழிந்தன
மழுங்கிய பாதைகள் தெளிந்தன
மயக்கிய கள்ளும் மறைந்தன

பதுங்கிய வீரம் பிதுங்கின
பசப்பிய கண்களை அறிந்தன
அடங்கிய கைகள் அறைந்தன
அழுத்திய கால்களை உதறின

ஆறிய கோபங்கள் பொறிந்தன
அடக்கிய கைகளை முறித்தன
தூங்கிய எண்ணங்கள் விழித்தன
துவண்ட ஆசைகள் செழித்தன

சீறிய எதிரிகள்
சிதறிய தலைகளை
எண்ண முடியமால் மயங்கினர்.
அதில் மீண்ட சிலரும்
தலைகளில் தடுக்கி
கீழே விழுந்து மடிந்தனர்.
மடிந்த மண்ணில்
சிதறிய இரத்தம்
சிரித்து கொண்டே ஊறின.
அதை சுவைத்த கழுகும்
தீட்டு என்று
முனங்கி கொண்டே பறந்தன.
போரிட்ட கைகளில் முத்தமிட்ட
அச்சிறுவனை தூக்கி தோளில் இட்ட

மேலும்

நல்ல படைப்பு வளமான சொல்லாடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Nov-2015 6:48 am
SATHYATHITHAN.A - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 6:50 pm

இதான் கடசி கத!
இத்தோட கண்ண இறுக்க மூடி தூங்கிடனும்! சரியா? என்று கொஞ்சும் அதட்டுலுடன் தன் ஆசிரியர் தொழிலின் வார்த்தை சாயலுடன் கொஞ்சிய படியே கெஞ்சினான் தன் குழந்தையிடம்!

வாயில் விரல் வைத்து, அரை பார்வை அன்பாய் பார்த்து..உம் உம் என்று தலையாட்டிய படியே அவன் அப்பன் வயிற்றை கரத்தால் சுற்ற முயன்றான்.முடியாமலே தோற்றான்!

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம்....

அடேங்கப்பா! ஏங்க... ராஜா "இருந்தாராம்!" பிள்ளைக்கு மரியதைய சொல்லி தாங்க என்று பின் திரும்பி படுக்கையில் தனக்கும் பங்கு உண்டென்று அதட்டலாய் உடலை அசைத்து அருகில் அயர்ந்தாள்.

ஆமா! நீ வேற..உன் புள்ள பாட்டுக்கு நீ தான் வீணையா??
உனக்கு கூ

மேலும்

SATHYATHITHAN.A - SATHYATHITHAN.A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2014 10:25 pm

சுவை கொட்டிடும் முகில் சோலைகள்.
தேன் இறக்கிடும் மர அருவிகள்.
தார் சாலையில் மழை பாம்புகள்.
தோரணமாய் திருச்சி!
தோன்றியது மகிழ்ச்சி!

குயில் யாவும் கூட்டினில் தூங்க
நுனி வேர் உன் திருப்புகழ் பாடும்.
குடையெல்லாம் உன் கொட்டு வாங்கி
வாசலில் அமர்ந்து அழுது தேம்பும்.

துளி ஒவ்வொன்றும் விந்தென
காளான்கள் கோஷமிடும்.
கரையான்கள் ஈசலாய் ஒரு-
நாள் மட்டும் வேஷமிடும்.

பனி நிரம்பிய நடைப்பாதை
காதலிக்க மேடையாகும்.
படுக்கையில் நெருக்கம் கூட
விவகாரத்து கணிசமாகும்.

தோகை நனைந்தாலும்
மயில் அழகை இழக்காது.
விடியல் புலர்ந்தாலும்
கம்பளி கதவு திறக்காது.
அலுவல் கூடினாலும்
நா தேநீர் மறக்காது.

மேலும்

நன்றி!! 03-Dec-2014 5:50 pm
மிக்க நன்று , மழைக்கால நிகழ்வை உண்மையில் உணர முடிந்தது 03-Dec-2014 12:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே