எது அறிவு

வரம்புகள் மீறும் தைரியம் எல்லாம்
பழக்கங்கள் தந்தது அல்ல.
நெறிமுறை வகுத்த புத்தகம் எல்லாம்
மேடை பேச்சுக்கல்ல.
உறவுகள் அமைத்த காரணம் எல்லாம்
கொச்சை படுத்த அல்ல.
மூளை நிறுவ தேவை எல்லாம்
யோசிக்காமல் ஏச அல்ல.

அமைதி காக்கும்
இதழ்கள் இரண்டும்
பேச தயங்கியன்று.
பேச்சை முறிக்கவே!!!

இங்கே,
படித்த அறிவிலிகள் மத்தியில்
சந்தனமும் சாக்கடை தான்.
ஒழுக்கம் வெறும் சம்பிரதாயம் தான்,
சுவாரஸ்யம் என்பது வீண் பேச்சு தான்.
தருமம் என்பது சிறிய களவு தான்.
நியாயம் என்பது அகப்படாமல் இருப்பது தான்.
நீதி என்பது தண்டனை தான்.

எழுதியவர் : சத்யாதித்தன் (24-Nov-15, 7:07 pm)
Tanglish : ethu arivu
பார்வை : 100

மேலே