வெறியின் உச்சம்

விழுங்கிய சொற்கள் எழுந்தன
இடறிய கற்கள் நெழிந்தன
மழுங்கிய பாதைகள் தெளிந்தன
மயக்கிய கள்ளும் மறைந்தன

பதுங்கிய வீரம் பிதுங்கின
பசப்பிய கண்களை அறிந்தன
அடங்கிய கைகள் அறைந்தன
அழுத்திய கால்களை உதறின

ஆறிய கோபங்கள் பொறிந்தன
அடக்கிய கைகளை முறித்தன
தூங்கிய எண்ணங்கள் விழித்தன
துவண்ட ஆசைகள் செழித்தன

சீறிய எதிரிகள்
சிதறிய தலைகளை
எண்ண முடியமால் மயங்கினர்.
அதில் மீண்ட சிலரும்
தலைகளில் தடுக்கி
கீழே விழுந்து மடிந்தனர்.
மடிந்த மண்ணில்
சிதறிய இரத்தம்
சிரித்து கொண்டே ஊறின.
அதை சுவைத்த கழுகும்
தீட்டு என்று
முனங்கி கொண்டே பறந்தன.
போரிட்ட கைகளில் முத்தமிட்ட
அச்சிறுவனை தூக்கி தோளில் இட்டு
கதைகளை முழுவதுமாய்
அவன் செவியினில்
பதறாமல் சொல்லி
நான் நகர்ந்தேன்.
காலம் கடந்து சொல்ல நேர்ந்தால்
வரலாறும் புனைந்து போகுமென்றேன்!!

எழுதியவர் : சத்யாதித்தன் (24-Nov-15, 6:57 pm)
பார்வை : 92

மேலே