விழிகள் பேசும் மொழியை உன் இதழை பேசச்சொல்லு

காதலை விழிகளால் பேசி மொழியொன்று படைத்தாய்
உணர்வுகளை வெட்கத்தால் புதைத்து காதலை மறைத்தாய்..
உன் மௌனங்களை என்னிடம் பலமுறை பரிசளிக்க
உன் பார்வைகள் பலமுறை என்னிடம் ஏதோ கேட்கிறது...
பொய் பேசத்தெரியாத காதலுக்கு
பொய் பேசக்கற்றுக்கொடுக்கிராய்..
காதலை மறைக்க நீ போடும் பொய் வேசம் தோல்வியடைய
உன் காதலின் மழலைக்குணம் உன் இதழில் தெரிகிறது..
உன் விழிகள் பேசும் மொழியை உன் இதழை பேசச்சொல்லு
என் இதயம் பேசும் மொழியை உன் இதயம் கேட்கும்..