இது கடவுளின் கதை

கடவுளை வைத்து
கொள்கைகள் தைத்து
மதத்தை செதுக்கி
மனிதம் வளர்த்தான்.

வளர்த்த மதமே
தன்னை அழிக்கும்
என்று அவனே
மறந்து போனான்.

கதிரும் காற்றும்
புனலும் அனலும்
வாழ்வை தருவதால்
உருவங்கள் ஆகின.

ஆடும் மாடும்
மண்ணும் மழையும்
உழவ நின்றதால்
கடவுளாகின.

மயிலும் கிளியும்
எலியும் புலியும்
அருகில் இருந்ததால்
துணைகளாகின.

மனிதன் வளர
வரலாறு பிறந்தது.
பங்கிட்டு கொள்ள
சண்டை பிறந்தது.
வஞ்சம் பிறக்க
கதைகள் திரிந்தது.
கதைகள் திரிய
வரலாறு புனைந்தது.

வென்றவனின் கடவுளும்,
ஆண்டவனின் ஆண்டவனும்
உயரந்தவனாக,
தோற்றவன் கடவுளோ
காவல் தெய்வமாய்
மாறி போக!


பிரிவனை பிறக்க,
அதுவாய் செழிக்க,
வறியவன் மொழியும்,
கடவுளை
துதிப்பவன் மொழியும்
வேறுபாடு கண்டன!

இதற்க்கிடையில்
........................
பாலைவனத்தை
கண்டு கண்டே,
பூவனத்தின் மீது
ஆசை கொண்டே
சொர்க்கம் புகுந்து
சூறையாடி,
தன இனத்தை நிறுத்தி
வென்று கூடி
மதத்தை நிறுத்தினான்!
அரேபியன்.
பின்பு அவனே
அன்பையும் செலுத்தினான் !

வென்ற மன்னர்கள்
இறந்து போக,
விட்டு சென்ற படிமங்கள்
வினைகளாக,
இன்றும் தொடரும்
வீதி போர்க்களம்!
வேடிக்கை பார்த்தால்
நீதி இறந்திடும்!

பசுவை உண்பது
தேச துரோகமா?

உன் இந்து பிள்ளையை
ஆஸ்திரேலியா அனுப்பாதே!!
உன் கடவுளை கொன்று
உணவாய் தின்று
செழித்து கொழுத்து
வளர்த்த கிருத்துவன்
வாழும் இடம் அது!

உன் இந்து பிள்ளையை
சீனா அனுப்பாதே!!
சிவனின் கழுத்தில்
ஓய்வெடுக்கும்
நீ தெய்வத்தில்
ஒன்றாய் நினைக்கும்,
பாம்பில்
ரசம் வைத்து
மூன்று வேலையும்
ருசித்து குடிக்கும்
மிருக மனிதன்
வாழும் ஊரது!

உன் இந்து பிள்ளையை
அறிவியல் படிக்க வைக்காதே!!
நீ காய்ச்சலுக்கும்,
கள்ள காதலில் பிரசவிக்கும்
கருவை அழிப்பதற்கும்
உண்ணும் மருந்தை,
விநாயக கடவுளின்
செல்ல பிராணியை வதைத்து,
வயிற்ரை கிழித்து
கொன்று புதைத்து
மருந்து உருவாக்கும்
கல்வி அது!!

மதம் ஏன் பிறந்தது?
அறிந்து கொள்!
அதை நீ தொடர்வதா?
முடிவெடுத்து கொள்!
யார் நீ என்று
புரிந்து கொள்!
பகுத்தாய்ந்திடும்
கருவியை கையில்
எடுத்து கொள்!

மனிதனை கொன்ற-
அரக்கனை கொன்ற
மனிதன் தானே
கடவுள் ஆனான்!
தன இறுதி குருதி
தரையில் விழும் வரை
அன்பு
செலுத்தியவன் தானே
இறைவனான்!

வேட்டையாடி பிழைத்ததாலே
மனித இனம்
வாழ்ந்தது தெரியாதா?

20 சதவிகித இந்தியன்
தினமும் பட்டினியால் வாட
உன்னை மிருகம்
காக்க சொல்லி
எந்த கடவுள் அழைத்தான்?

நாளை முதலே
உலகும் முழுதும
காய்கறி தின்றால்
ஒரு வருடத்தில்
உணவு முடிந்திடும்!
கணக்கெடுப்பு மறந்தாயோ?

விவசாயம் அழிய,
எலிகள் தின்ற
உழவர்கள் கதைகள்
உமக்கு தெரியாதா?

மரங்கள் நடு!
விவசாயம் பெருக்கு!
முட்டாள் பதரே!
பட்டினி போக்கு!
பின்பு உன் கருத்தை தொடு!
நாடும் வீடும்
அய்யனாரும் அல்லாவும்
உன் பேச்சை கேட்பர்!

மறுத்தவன் மொழியும்
மறுத்தவனை,
உதைத்தவன் மொழியும்
அதை பொறுத்தவன் மொழியும்
பீறிட்டு எழுந்தால்
பொறுத்தவன் எழுவான்!
உதைத்தவன் புதைவான்!

எழுதியவர் : சத்யாதித்தன் (4-Dec-15, 8:23 pm)
சேர்த்தது : SATHYATHITHAN.A
பார்வை : 530

மேலே