எதை விட்டுசெல்ல வேண்டும்
மண்புழு உரத்தை விட்டுச் செல்கிறது
மேகம் மழையை விட்டுச் செல்கிறது
மரங்கள் (உணவை) சுவாசத்தை விட்டுச் செல்கிறது
மாடு வாழ்ந்த பின்னரும் தன் தோலை விட்டுச் செல்கிறது
இவ்வளவு ஏன் மனிதன் உருவாக்கிய இயந்திரங்கள் கூட
உதிரி பாகங்களை விட்டுச் செல்கிறது
ஆனால் நாமோ?!
ஆறடி குழிக்கு நம் உடலை விட்டுச் செல்கிறோம்!
உன் கண் இவ்வுலகை காண வேண்டாமா!
உன் கணை பிறர் உயிரை காக்கும் அல்லவா?!
இன்னும் பல பாகங்கள் பிறர் மகிழ உயிர் காக்குமே!
நாம் வாழ பிறர் வாழ்வது மகிழ்ச்சியாம்!
நாம் வீழ்ந்த பின்னரும் பிறர் வாழ்ந்தால்?!!
எண்ணிப் பார்!!
வாழும் வரை இரத்த தானம்.வாழ்க்கைக்குப் பின்னர்
நம்மையே விட்டுச் செல்வோமே!