காதல் பேச்சு
முற்றும் துறந்த ஞானி போலான பேச்சு...
ஏதுமறியாத குழந்தை பேச்சு...
எல்லாம் எனக்கு தெரியும் என்ற
ஆணவ பேச்சு....
ஒன்றும் அறியாதது போன்ற
நடிப்பு பேச்சு .....
கனிந்து உருகி அன்பை கொட்டும்
காதல் பேச்சு...
உலகமே என் காலடியில்
என்ற அழகின் திமிரான காம பேச்சு....
சந்திரனையும் சூரியனையும்
ஆராய்ச்சி செய்தது போல
அறிவு பேச்சு...
எத்தனையோ விதமான
பேச்சு திறமை இருந்தாலும்
இன்று
இயற்கையின் சீற்றத்தின் முன்பாக
வாய் மூடி நிற்க வைத்து விட்டதே விதி..
முட்டி மோதி குமுறிக்
கொட்டிக் கொண்டிருக்கும்
வருண பகவானை சமாதானம் செய்ய
யாரிடமும் சாமார்த்தியமான
பேச்சு இல்லையே....