உதவிக்கரம் கொடுப்போம் மக்களே ---- இன்னிசை வெண்பாக்கள்
கடலுக்குள் மூழ்கியதைக் கண்ணெதிரே பார்த்தேன்
படகிற்குள் பாதுகாப்போம் பாசத்தில் நாமும்
விடலைப்போல் மாரி விளையாடி செல்ல
மடல்களிலும் தந்திட்டார் மண் .
மண்ணிற்கு வேண்டும் மழையென தெய்வமும்
விண்ணில் நினைத்து விரைந்து வருமெனக்
கண்களில் காணுகின்ற காட்சியோ நெஞ்சத்தைப்
புண்ணாக்கி நின்றது புண் .
கடலூரும் சென்னையும் கண்ணீரில் நிற்கச்
சடலங்கள் ஒவ்வொன்றாய்ச் சாரியாய் வந்து
மிதக்கின்ற காட்சிகள் மீண்டு மெனக்குக்
கனவாகத் தோன்றிடுதே கண்டு .
வெள்ளத்தில் சிக்கிடவும் வேகமாய்க் கைக்கொடுக்கும்
உள்ளத்தால் செய்யும் உதவிகள் நன்மைதரும் .
பள்ளத்தில் மூழ்க பரிதவித்துக் கண்கலங்கி
தள்ளாடிக் காப்போர் தலை .
எத்தனையோ காட்சிகளில் எத்திக்கும் கண்ணீரே .
பத்திரமாய் மீட்டிடுவோம் பண்பாளர் நாமெல்லாம்
உத்திரத்தில் தொங்கி உயிர்மீட்புக் கேட்போர்க்கும்
நித்தியமாய் செய்வோம் நினைந்து .
கலங்கிடும் நெஞ்சத்தின் கண்ணீரைப் போக்க
நலம்பல செய்திடுவோம் நாளும்நாம் கூடி
பலருக்கும் செய்கின்ற பாசமுடை நன்மை
விலகாது காக்கும் விரைந்து .