பாலாபிஷேகம்

பாலாபிஷேகம்
பால் விலை
தங்கம் விலையானாலும்
பச்சிளங்குழந்தைகள்
பட்டினி கிடந்தாலும்
எங்களுக்குக் கவலை
எள்ளவும் கிடையாது.
இதய தெய்வத்தின்
புதுப்படம் திரையேறும்போது
ஒவ்வொரு ஊரிலும்
திரையரங்கு வாசலில்
குடம் குட்மாய்க் கொட்டி
பாலாபிஷேகம் நடப்பதை
பரமனாலும் தடுக்கமுடியாது
இதய தெய்வங்களின்
இனியமனம் குளிர
இதையும் செய்வோம்
எதையும் செய்வோம்.
எங்களில் சிலர்
அவர்களின் பெயர்களின்
முதல்பாதிப் பெயர்களை
எங்கள் பெயர்களோடு
ஒட்டிக் கொண்டிருக்கும்
பக்திப் பிணைப்பை
புரியாமல் எங்களைக்
குறைசொல்ல வேண்டாம்.