பிடிக்கும்

பாசத்தோடு வளர்த்ததினால் அம்மாவை பிடிக்கும்
நான் பட்டம் படிக்க காரணமான அப்பாவை பிடிக்கும்
கேட்பதை வாங்கி தந்த அண்ணணனை பிடிக்கும்
நான் கேட்காததையும் வாங்கி தந்த அக்காவை பிடிக்கும்
சண்டையிட்டு மகிழும் தம்பியை பிடிக்கும்
எண்ணங்களை பகிர்ந்த தங்கையை பிடிக்கும்
தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வரும் மாமாவை பிடிக்கும்
தின்பண்டங்கள் நிறைய தந்த அத்தையை பிடிக்கும்
என் முயற்சிக்கு தோல் கொடுத்த பெரியப்பா பிடிக்கும்
என்னை இப்பவும் குழந்தையாய் பார்க்கும் பெரியம்மா பிடிக்கும்
சின்ன சைக்கிள் வாங்கி தந்த சித்தப்பா பிடிக்கும்
வாங்கி தர காசு தந்த சித்தியை பிடிக்கும்
என்னை ரசிக்கின்ற நண்பர்களை பிடிக்கும்
அப்போ மிட்டாய் வாங்கி தந்த தாத்தாவை பிடிக்கும்
சண்டைபோட்டால் சமாதானபடுத்தும் பாட்டி பிடிக்கும்
ஒன்றாம் வகுப்பு கணக்கு டீச்சரை ரொம்ப பிடிக்கும்
பக்கத்துக்கு வீட்டு சுப்ரமணியை கொஞ்சம் பிடிக்கும்
உறவுகளை நேசிக்க பிடிக்கும்
உண்மைகளை சொல்ல பிடிக்கும்
பணக்காரன் ஆக பிடிக்கும்
ஏழைக்கு உதவி செய்ய பிடிக்கும்
நல்ல மனிதர்களை பிடிக்கும்
இந்த நாடு நல்லா வளர பிடிக்கும்
கடவுள் பக்தியோடு கும்பிட பிடிக்கும்
கடைசி வீட்டு கன்று குட்டியை பிடிக்கும்
என்னவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்
எனக்கு ?



"கவிதை" எழுத பிடிக்கும்................

எழுதியவர் : திருவேங்கடம் (29-Oct-14, 6:50 pm)
சேர்த்தது : திருவேங்கடம்
Tanglish : pidikum
பார்வை : 143

மேலே