காதலென்னும் காயங்களுடன் 555
என்னவளே...
உன்னிடம் காதலை சொல்ல
தினம் காத்திருந்து...
காகிதங்களும் பூக்களும்
சுமந்துவந்து...
பூக்கள் சருகாகி
திரும்புகிறேனடி...
காதலை சொல்ல ஆயுதங்கள்
இல்லாத போர்களத்தில்...
உன் கண்கள் என்னும்
ஆயுதங்கள் என்னை தாக்கினாலும்...
நான் சந்தோசமாக
இறந்து விடுவேனடி...
ஆயுதங்கள் இன்றி
நீயும் நானும்...
காதல் என்னும்
போர்க்களத்தில்...
காதலே வேண்டாமென
நான் ஒதுங்கிவிட நினைத்தாலும்...
துடிப்பதை நிறுத்திவிட
இதயம் ஏங்குதடி...
உன்னை மறக்க மட்டும்...
கானல் நீரில் நீச்சலடிக்க
துடிக்கிறேன்...
காதல் இல்லாத
உன்னை நினைத்து...
காதல் என்னும் காயங்களுடன்
காத்திருக்கிறேன் மெளனமாக...
நீ வருவாயோ
காயத்தினை போக்கிவிட.....