மலர் மங்கை

இளம்காற்றின் இன்னிசைக்கு
கானம் பாடிய கருங்குயில்கள்
கன்னி அவளை கண்டவுடன்
காதல் மோகத்தில் கிறங்கியது

பிரம்மன் இவளை படைத்தானா
இல்லை இவள் தான் பிரம்மனை படைத்தாளா..?
பட்டிமன்றம் நடத்தியது பறவைகள்


தேகம் தழுவிய சின்ன பனித்துளியை செல்லமாய் தட்டிவிட்டு
மெல்ல நடைபோட்டாள்
மலர் பறிக்க மங்கை அவள்

மலர் பறிக்க மலர் இவளா.?
மயக்கம் தீராமல்
வினாவின
வண்டுகள்......!!!

எழுதியவர் : கயல்விழி (31-Oct-14, 7:45 am)
Tanglish : malar mangai
பார்வை : 253

மேலே