தாயின் அன்பு முத்தம்
கலப்படமில்லா காதல் முத்தம்
____இலக்கணமில்லா மொழியின் முத்தம்
கண்ணயரா விழிகள் நித்தம்
____என்னுயிர்த்தாயின் பார்வை முத்தம்!
என்னுயிர் உன்னுயிரைக் கொண்டு
____உன்னுடலில் என்னைக் கொண்டு
எண்ணங்களில் என்னுருவம் கண்ட
____மண்ணுலகத் தெய்வத்தின் கனவுமுத்தம்! - அனைவருக்கும்
விடுமுறை என்பது உண்டு
____விலகுவதற்கு வாய்ப்பும் உண்டு
விட்டுக்கொடுக்காமல் உழைப்பாயே எனக்காக - உன்
____வியர்வையால் குருதி முத்தம்!
ஊர் வெறுக்கும் தொல்லையானாலும்
____பேர் கெடுக்கும் பிள்ளையானுலும்
உணவு சாப்பிட்டாயா? எனக்கேட்க்கும்
____உன் உச்சப்பாசத்தின் முத்தம்!
உன்குருதியை உணவாய் தருவாய்
____உன்னழகில் என்னுடல் தருவாய்
என் வாழ்க்கை தொடக்கம் தருவாய் - தாயே!
____உன் அன்பு முத்தத்தில்!!!
ஏ.ரா.தினேஷ்பாபு
நான்காம் ஆண்டு கணினி பொறியியல்
நாலெட்ச் பொறியியல் கல்லூரி
சேலம்