உன்னை சிந்தித்தால் - கவிதைப் போட்டி

சிந்திக்கத்தூண்டும்
சிந்தனையே - உன்னை
சிந்தித்தால்........................

சிறப்பான சிந்தனை என்றால்
ஏற்றம் தருவாய்.
சொற்பமான சிந்தனை என்றால்
சோதிக்கச் செய்வாய்.

சிந்திக்காத மனிதன் இல்லை
அவன் அதிகம்
சிந்தித்தால் யாதொரும் பயனும் இல்லை.

சிந்தனையே - நீ ஒரு
சமுத்திரம். - உன் நினைவுகளில்
சிக்காத மனித மீன்கள் இல்லை.

மீனுக்கு நீர்தானே ஆதாரம்.- இந்த
மனித வாழ்வுக்கு நீதானே சமாச்சாரம்.

மனிதனுக்கு ஆறறிவு என்றார்களே - அதனை
மதிப்பிடச் செய்வது நீதானோ? - ஆம் என்பேன்.
மதியூகியாக நீ செயல்படுவதால்
மதிப்பு இவனுக்கல்லவாக் கிடைக்கிறது.

சிந்திக்காதவனின் செயலில்
சிக்கல்தான் சிறகை விரிக்கும்.- அதில் அவன்
சிறைப்பட்டுத்தான் தள்ளாட்டத்தில் தவிக்கும்.

சீரிய சிந்தனை இருந்தால் - அவன்
சிகரத்தைக்கூட தொடமுடியும்.
சிந்தனையே உந்தன் மறுபக்கம் யோசனை.
வியூகம் வகுத்து வழிக்காட்டும் சாதனை.

உன்னை சிந்தித்தால் தானே - கல்வியில்
ஊக்கத்தை விதைக்க முடியும்.
வாழ்க்கையில் வரும் வறுமை
ஊனத்தை தகர்க்கமுடியும்.

ஓ.....இளைஞர்களே இளைஞிகளே
சிந்தியுங்கள் .......அதுதரும் பாதையை
சந்தியுங்கள். ....சாதனையின்
சான்றினை அது சாதகமாக்கித்தரும்

ஓ......மனிதர்களே
சிந்திக்காமல் எதையும் செய்யாதீர்.
சித்திரவதைக்கு ஆளாகாதீர்.
சிந்தனை ஒரு தீக்குச்சி.- அதில் உன் மன
சிதிலங்களை சீர்படுத்திக்கொள்ளுங்கள்.

உடலுடன் உயிராய் உள்ளவரை
மரணம் உன்னை தழுவும் வரையில் - உன்
மனதில் சிந்தனையின் நிழல் இருக்கும்.

எழுதியவர் : ச. சந்திர மௌலி (4-Nov-14, 7:19 pm)
பார்வை : 227

மேலே