ஆராய்ச்சி

"டாக்டர்..உள்ளே வரலாமா..".
நிமிர்ந்து பார்த்தேன்.."ஒ..ராம்..வா..வா.." என்று அழைத்ததும் வந்து உட்கார்ந்து கொண்டான்.
"என்னப்பா..ஆளை ரொம்ப நாளா காணோம்"
"அது..வந்து..டாக்டர்.."
"சும்மா சொல்லுப்பா..என்ன காதல்..கீதல்..ம்..ஹ்..ஹஹஹ்.ஹா" என் சிரிப்பு அவனை கொஞ்சம் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும்..
"அதெல்லாம் ஒண்ணுமில்ல டாக்டர் ...நான் வேல செய்ற இடத்துல என்னை கொஞ்சம் மூட் அவுட்டாக்கி விட்டுட்டானுக ..லீவு போட்டுட்டு கிராமத்துக்கு பத்து நாள் போயிருந்தேன்..!"
"மூட் அவுட்டா.." என் மனோதத்துவ அறிவு பரபரத்தது..
" ம்..எங்க ஆபீஸ்ல எப்பவும் நான் எங்கோ பார்த்திட்டு உட்கார்ந்துட்டு இருக்கேன்னும் வேலையே செய்றதில்லனும் பேசிக் கொள்ளும் படி ஒரு நிகழ்ச்சி நடந்துடிச்சு.."
"ம்..மேல போ.." அப்பாடா..சூப்பர் கேஸ் வருதுன்னு தோணுச்சு !
"ரசாயனத்தில Ph.D. பண்ணிட்டுருக்கிற எனக்கு ஒரு ஆராய்ச்சி பண்ணனும் . அதுக்காக..ஒரு பெண்ணை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேன்.."
"சூப்பர்..அப்புறம்.."
"அவளுக்கு சில ரசாயனங்களை கலந்து குடிப்பதற்கு கொடுத்தேன்.. "
" ம்ம்..என்ன ஆனாள்..என்ன ஆராய்ச்சி"
" சிம்பிள்... அதை சாப்பிட்டதும் அவள் ரொம்ப சாந்தமா மாறிடனும்..அவ்வளோதான்"
" மாறி ..னாளா ..என்ன?"
"ம்ம்..ஊஹூம்..இன்னும் கோபமா ஆய்ட்டா..விஷயத்த நா சொன்னதும்.."
"டேய்..பொறம்போக்கு..ஏதோ ..காசு கொடுக்கறேன்னு சொன்னியேன்னு செய்ற தொழில உட்டுட்டு ஒம் பின்னாடி வந்தா..என்னமோ மாத்துராறாமில்ல "ன்னு சொல்லிட்டு போயிட்டா."
நீங்களே சொல்லுங்க டாக்டர்..இதுல என்ன தப்பு..கொஞ்சம் ட்ரை பண்ணினா முடிச்சுடுவேன்..அந்த மருந்த கொண்டு வந்திருக்கேன் ..ஒங்க மிசஸ் கிட்ட கொடுத்து ட்ரை பண்றீங்களா "
'யாரோ என்னை எங்கோ பாதாளத்தில் தள்ளி விட்டது போலவும்..குரல்கள் சன்னமாகவும் கேட்டன..
.