அவளின் அவர்தொடர்கதை
அவர் இன்னமும் எழுந்திருக்கவில்லை.
அதிகாலை நேரம்.அதற்குரிய ஆரவாரங்கள் எதுவும் அன்று இல்லாததே வித்தியாசமாக இருந்தது கெளசல்யாவுக்கு..இவள் பெயரே கல்யாணத்திற்குப் பின் தான் அவளுக்குக் கிடைத்தது.
" கெளசல்யா சுப்ரஜா ராமா ..."....எம் எஸ். சுப்புலட்சுமியின் குரலில் சுப்ரபாதம் பக்கத்து வீட்டில் ஒலித்து நிசப்தத்தைக் கலைத்தது.
கெளசல்யா நினைவுக்குள் மூழ்கினாள்....
முதலிரவு அறைக்குள் நுழைந்தவளுக்கு .அவள் இல்லாதது வியப்பையும் ஒருவித அச்சத்தையும் அளித்தன..என்னமோ எழுதிக்கொண்டிருந்தார்..
இந்த இரவிலா..? இப்பொழுதா..??.
இவளின் மெட்டி ஒலியும் கனைப்பு ஒலியும் அவரின் கவனத்தை கலைக்கவில்லை.....
சன்னல் கதவைத் திறந்தாள்..சில்லென்ற காற்று அவர் முகத்தில் பட்டு திரும்பினார்..இவளைப் பார்த்தார்.
" அட..வந்துட்டீங்களா..வாங்க...வாங்க...அப்படி உட்காருங்க...இதோ வரேங்க"
என்ன இது என்னைப் போய் 'ங்க'-போட்டு பேசராரு....குழம்பினாள்.....
"இந்தக் கட்டுரையை எழுத்து.காம் இணையத்திற்கு அனுப்பணும்..சே..பற்றிய கட்டுரைங்க அது...இப்ப முடிச்சுடுவேன்..கொஞ்ச நேரந்தாங்க...."
"சே..வா...என்ன இது சீ... சே....ன்னு..இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா."
"சே பத்தி உங்களுக்கு தெரியாதா..நான் முடித்து வருவதற்குள் இதைப் படித்து வைங்க.......சரியா? "
அவர் தந்த அந்த ஒரு தாளை வாசிக்கத் தொடங்கினாள்...
“வானம் பொய்த்த
சூன்ய வெளியின்
சூழ்நிலை மாற்றி
சொர்க்கப்புரியாக்கிட
முன்னேற்ற மேகங்களை
சுமந்து வந்தவன் நீ சே கு !
பொதுநல மரமேறி
தன்னல கனி கொய்தோர்
தலைஎழுத்தை திருத்த
முன்னேற்ற எழுத்துக்களை
சுமந்து வந்தவன் நீ சே கு !
தினம் தினம் தினையளவு
உணவுக்கு உருக்குளைந்தோர்
வாழ்வு உயர
முன்னேற்ற அமுதசுரபியை
சுமந்து வந்தவன் நீ சே கு !
நாடு காக்கும் பெயரால்
தத்தம்
சந்ததி வளர்த்த
பழியாளர் நிலை மாற்றிட
புரட்சி வழி
காட்டியவன் நீ செ கு !
சுமையாகிடுவது மனிதன்
சுமைதூக்கியாவது மாமனிதன்
சே கு நீ மாமனிதன்!! “
அவளுக்கு பாதி புரிந்தது..பாதி புரியவில்லை ..ஆனாலும் அவரை அவளுக்குப் பிடித்துப் போனது...
அவர் இவளை நோக்கி “என்னங்க படித்து முடித்தாச்சா? ”
அவரை நோக்கி நடந்தாள் மனதில் சில அய்யங்களோடே..
(அவர் எழுந்திருப்பார்..)