வகுப்பறை

வகுப்பறை

ஆயிரம் எண்ணங்களை
உயிர்பெற செய்து
அவற்றில் பலவற்றை
வெற்றியடைய செய்து
மாணவனை புகழின் உச்சியில் ஏற்றி
வெற்றிகளிப்படைய செய்வதற்கான
தொடக்கம் வகுப்பறை..

யார் என்று தெரியாத
முன் பின் பார்த்திராத
ஒருவரை ஒரே நொடியில்
நண்பனாக மாற்றுவதற்கு
நட்புகரத்தை நான் நீட்டிய
முதல் இடம் வகுப்பறை..


வேற்றுமொழியை
பயிற்றுமொழியாக்க முயன்று
அதை பாடமாக மாற்றிய அவலத்தை
நான் கண்ட இடம் வகுப்பறை..

சிறிய சிறிய ஆசைகளை
பெரிய பெரிய கனவுகளை
சிறிது சிறிதாக நிறைவேற்ற
நான் ஆலோசனை கேட்க விரும்பும்
அறிவாற்றல் மிகுந்த ஆசான்களையும்
உயிருக்குயிரான தோழர்களையும்
ஒன்றாக நான் காண முடிந்த இடம்
என் வகுப்பறை..


சிற்பியின் வேலையை
தனதாக எடுத்துக்கொண்டு
என்னை துளித்துளியாக செதுக்கி
அதில் வெற்றியும் கண்டு
என் எதிரே உள்ள நிகழ்காலத்தை
ஒளிபெற செய்த
என் வகுப்பறையை விட்டு
கண்ணீருடன் விடை பெற போகும் நாள்
வெகு அருகில்...



S.Nirosa
department of B.TECH Information Technology,
Dr.NGP INSTITUTE OF TECHNOLOGY
COIMBATORE.

எழுதியவர் : (7-Nov-14, 9:48 pm)
சேர்த்தது : S.Nirosa
Tanglish : vagupparai
பார்வை : 1955

மேலே