விடியல் விடியுமோ - அரவிந்த் C

பயமின்றி
திரிந்த காலங்கள்,
தொலைந்து போயின..
கொஞ்சம் கொஞ்சமாய்
பயம் என்னுள்,
துளிர்க்க தொடங்கின..
முறுக்கேறிய என் தேகம்,
மறைந்து போனது..
வான் பார்த்த என் மீசை,
இப்போது வளைந்து போனது..
வாகனத்தின் வேகம்,
குறைந்து போனது..
எதிர்காலத்தின் பயம்,
என்னுள் நிறைந்து போனது..
கோழையாகி போனேனா நான்...?
கேள்விகள்
எழும்பிட தொடங்கியது...
விடை அறியா என் மனம்
குழம்பி குழையுது..
எதிர் காலத்தின் எதிர்பார்ப்புகள்
இல்லா என்னுள்
பயத்தின் நிழல் விழுகிறது
எப்படி...?
புரியாமல் அழுகிறது
என் மனது...
இரத்தத்தின் சூடு
தணிந்து போனதா..
இல்லை
இச்சமுகத்தின் சூடு
என்னுள் பதிந்து போனதா...
புரியவில்லை
மீண்டும் எப்போது
முறுக்கேறும் என் தேகம்
பயமின்றி வலம் வர
வழியுண்டோ இனி
விடியல் விடிய வேண்டும் என்னுள்
மீண்டும் திரிய வேண்டும்
பயமின்றி
பயமின்றி இவ்வுலகில்...!