எங்கேயும் எப்போதும்
![](https://eluthu.com/images/loading.gif)
இந்த நேரத்திற்குத்தான்
நான்....!
என்னருகில் நீயிருந்தால்
உன்னுள்ளே நான் என...
ஓரிடம் இருத்தி.
உள்ளிறங்கி ஆழ்த்தி..
இசையூட்டியிருந்த
வானொலிப் பூக்காலங்கள்
தொலைத்து......
எங்கும் நான்வருவேன்...
நீ...
ஓடிக்கொண்டேயிரு...
உன்னைத் தொடர ஒரேயொரு
உபகாரம்...
எனக்கான
செவிச் சிம்மாசனங்கள்
நீ அலங்கரிக்க வேண்டும்....
ஆடம்பரங்கள்
அவசியமாய் மாற்றிக்
களைத்தபோதும்...
நீ... ஓடிக்கொண்டேயிரு...!!
நானும் உன்
வியர்வை தின்றே
உன்னைத் துரத்தியிருப்பேன்....!!
இப்படியாய் பாதாளங்களில்
இரைந்திருந்தது
செவி புதைந்திருந்த
சிறுகுழல் இசைத்துப்பிகளாய்
பன்னாட்டு வணிகம்....!!!