ஆசையின் பேசா பாசைகள்

சொல்லி முடித்த வார்த்தைகளில்
முற்றுபெறா கனவுகளை எடுத்து
இறக்கைகட்டி ஆசைகள்
விதைத்துவர சொல்கிறேன்..!

பார்வை படாத சந்திப்புகளில்
ஒதுங்கிப்போன நெருக்கங்களை அழைத்து
நேசம்புகட்டி பதிலை
திருடிவர சொல்கிறேன்..!

அழுது தீர்க்காத வேதனைகளில்
மறைந்துபோன கண்ணீரை பறித்து
அனல்மூட்டி யாருமறியாது சிரித்துவர சொல்கிறேன்..!

விட்டு சென்ற உறவுகளில்
ஒட்டிக்கொண்ட தனிமையை கொஞ்சி
சீராட்டி ஏமாற்றம்
பழகிவர சொல்கிறேன்..!

வாழ்ந்திட மறுத்த நிமிடங்களில்
கரைந்துபோன உயிரை தேற்றி
திரட்டி சலனமின்றி
சுவாசித்துவர சொல்கிறேன்..!

பாசம் உயர்ந்த இடங்களில்
உடைந்துபோன விருப்பங்களை உலர்த்தி
பாராட்டி தியாகம்
ஏற்றுவர சொல்கிறேன்..!

வெளிச்சம் தேடிய இரவுகளில்
பயந்துபோன நிழலை பிடித்து
திட்டி விழிகளை
நெருப்பாக்கிவர சொல்கிறேன்..!

எழுதியவர் : manimegalai (10-Nov-14, 3:36 pm)
பார்வை : 110

மேலே