தாயின் அன்பு முத்தம்

. தாயின் அன்பு முத்தம்
யுத்தம் பல செய்தாள் செல்லமே
என முத்தமழை பொழிய!
உருவாகும் முன்னமே உயிருக்கு
உயிராக என்னை எதிர் பார்த்தவள்!

கருவான காலத்தில் இருந்தே கனம் கனம் ஏங்கியவள்
கண்ணே என் கண்மணியே என கண்ணத்தில் முத்தமிட!
பிறந்த பலன் பெற்று விட்டேன்
தாயவள் தந்த அன்பு முத்தத்தில்!

அடிமேல அடிவைத்து நான் நடைப்பழக மண்மேலே
முத்த மிட்டல் மகனே உன் பாதமலர் வாடுமென்று!
கண்மெலே முத்தமிட்டாள் ,கவித்தமிழில் தாலாட்டுபாடி ,
தொட்டிலிலே நான் தூங்க!

தலை மேலே முத்தமிட்டாள்,
தங்கமே என் மடிமீது தலை வைத்து துயிலடா!
குற்றம் செய்தும் முத்தமிட்டாள்,
முத்தே நீ நான் பெற்ற நவமணியும் நீயாட!

ஆராரோ பாட அவதரித்த சொற்கமே
உன்னழகை பார்க்கும் போதெல்லாம்
நான் தருவது இந்த “தாயின் அன்பு முத்தமே”!

ஆயிரம் முத்தத்தாள் அலங்கரித்தாள்,“அம்மா “
என்று நான் அழைக்க ஆனதம் கொண்டாள்“அவதரித்ததே
இதை கேட்கதானடா என் செல்லமே” என்று!!
சந்தனபாரதி.ப
த/பெ .பரமசிவம்.கு
முதுகலை கணினி பயன்பாடு 2ம் ஆண்டு
jkkm தொழிற் கல்லூரி T.N paalaiyam gobi (post) erode

எழுதியவர் : ப.சந்தானபாரதி (10-Nov-14, 7:54 pm)
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 173

மேலே