அம்மா - கட்டளை கலித்துறை

உன்னால் உருவும் உயிரும் உடலும் உலகமிதில்
முன்னால் பெறுவேன்! உனக்காய் எதுவும் முறையுடனே
என்னால் இதுவரை ஆனதும் உண்டோ இலையிலையே
பொன்னை நிகர்த்த பொறுமை வடிவமே போற்றுவனே

அன்பால் அணைத்தாய் அருந்தவ மென்றே அலங்கரித்தாய்
என்பும் எனக்காய் கொடுக்கத் துணியும் எளியவளே
உன்பால் குடித்தேன் உயிரை வளர்த்தேன் உயர்ந்தினிதே
தன்பால் இழுக்கும் தமிழும் குடித்தேன் தகுமுறையே

முறையாய் உன்னைப் புகழ்ந்திட வார்த்தை முழுமையில்லை
குறையாய் நினைக்க துரும்பென எந்தக் குறையுமில்லை
இறையாய் எனையே வளர்த்திடும் அன்பிற் கெதுவுவமை ?
கறைவாழ்க் கையையே அடைந்தேன் உனைஎண்ணிக் காக்கலையே !

எழுதியவர் : அபி (10-Nov-14, 12:24 pm)
பார்வை : 202

மேலே