தாய்மை பண்பின் உச்சம் சேய்க்கு ஆசை முத்தம்
உடல் நொந்து
உயிர் அளித்து
உதிரம் முறித்து
உணவு கொடுத்து
உனை காத்து
உலகம் மறந்து
உறவாடும் ஈரெழுத்து
உந்தன் தலையெழுத்து
உச்சம் பறந்து
உவணை சென்று
உக்களம் உகுவு
ஊதிகை மயிறது
உலப்படும் வாசமது
உவள் கேசமது
உதடும் பதித்து
உருக்கும் அன்பு
உளது கன்னத்து
உன்னத உணர்வு
ஊதிவரும் உறவுப்போழுது
உறையட்டும் இப்போது
உவட்டட்டும் முப்பொழுது
உலகுமறப்பேன் அப்போது
---> பி.கு .
சொர்கத்திற்கு செல்ல இறக்க வேண்டாம்
உன் தாய் மடியில் உறக்கம் போதும்
இப்படிக்கு,
உணர்வுகளுடன் #சரவண_உயிரா ( ஜீவா சரவணன்) (விழுப்புரம்),
இளநிலை கட்டிடப் பொறியியல் ,முதலாம் ஆண்டு .(சென்.ஜோசப் , சோழிங்கநல்லூர் )