சரவண உயிரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சரவண உயிரா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 8 |
இளநிலை கணினி அறிவியல் கற்கும் எனது சகோதரிக்கு (சரவண.ரீனா) நான் தீட்டிய முதல் கவி இது !
அவளுக்கு பரிசளிக்க பாரெங்கும் பரிசு தேடினேன் கிடைக்கவில்லை
எனது கவியைத்தவிர .........
பிறந்தநாளில் கவிக்கிறேன் என்னவளுக்காக ........
இறவாதுவாழ வாழ்த்துகிறேன் என்றும் அவளுக்காக ......
உணர்வுகளுடன் #சரவண_உயிரா
08/01/2014
கண்ணிமைகள் மூடினாலும் சிந்தனைச் சூரியனைப்போலே
சுட்டெரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
கண்டகனவு மெய்யாக பிடியகலா உடும்புப்போலே
வைராக்கியக் கனவு மெய்ப்பட வேண்டும் !
ஊற்றெடுக்கும் பட்டறிவை குடுவையில் அடைத்து
தினம் குடிக்குங்கனவு மெய்ப்பட வேண்டும் !
ஆதவனின் ஒளிபோலே ஆசானின் அறிவென்று
எவனும் உணருங்கனவு மெய்ப்பட வேண்டும் !
முக்கனிச் சுவைபோலே கற்றலில் சுவைகாண
கல்விமுறை மாறுங்கனவு மெய்ப்பட வேண்டும் !
தாய்ப்பால் பருகும் இன்பம்போலே தமிழ்மொழிவழி
அகன்றகல்வி கற்குங்கனவு மெய்ப்பட வேண்டும் !
மாணவர்கள் மூளைக்கு மின்சாரம் பாய்த்தார்போலே
பாடங்கற்கும் கனவு மெய்ப்பட வேண்டும
கண்ணிமைகள் மூடினாலும் சிந்தனைச் சூரியனைப்போலே
சுட்டெரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
கண்டகனவு மெய்யாக பிடியகலா உடும்புப்போலே
வைராக்கியக் கனவு மெய்ப்பட வேண்டும் !
ஊற்றெடுக்கும் பட்டறிவை குடுவையில் அடைத்து
தினம் குடிக்குங்கனவு மெய்ப்பட வேண்டும் !
ஆதவனின் ஒளிபோலே ஆசானின் அறிவென்று
எவனும் உணருங்கனவு மெய்ப்பட வேண்டும் !
முக்கனிச் சுவைபோலே கற்றலில் சுவைகாண
கல்விமுறை மாறுங்கனவு மெய்ப்பட வேண்டும் !
தாய்ப்பால் பருகும் இன்பம்போலே தமிழ்மொழிவழி
அகன்றகல்வி கற்குங்கனவு மெய்ப்பட வேண்டும் !
மாணவர்கள் மூளைக்கு மின்சாரம் பாய்த்தார்போலே
பாடங்கற்கும் கனவு மெய்ப்பட வேண்டும
பாரதத்தின் குடியுரிமை கூட வேண்டாம்
மறதி உன்னுள் குடி கொண்டால் நீயும்
அரசியல் வாதியே !
சிந்தையுள் நிகழும் இனம் புரியா வேதியல்
வினைகளுக்கு இந்த பூலோகம் சூட்டிய பெயர் காதல் !
நதிபேசும் மொழிகேட்டு ரசித்துக் கொண்டே
........நெடுந்தூரம் மணற்பரப்பில் நடக்க வேண்டும் !
புதிராக இருக்கின்ற எதுவும் எந்தன்
........பார்வையிலே பதில்சொல்லி முடிக்க வேண்டும் !
விதியென்னும் புதைகுழியில் வீழாமல் என்
........விருப்பம்போல் கடைசிவரை வாழ வேண்டும்!
அதிசயமாய் நான்மட்டும் சுவாசம் செய்ய
........ஆக்ஸிஜனும் எனக்குள்ளே சுரக்க வேண்டும் !
கல்லறையில் எனைக்கொண்டு வைத்த பின்னும்
........கரையான்கள் அரிக்காத மேனி வேண்டும் !
சில்லறையாய் எனதுஉடல் சிதையும் போதும்
........சிரிக்கின்ற திடமான உள்ளம் வேண்டும்!
சல்லடையில் வார்த்தைகளைச் சலித்தெடுத்து
........சரித்திரங்ள் படைக்கவரும