தாயின் அன்பு முத்தம்
காய்ந்த இலை கேட்டது
என்னை யார் தாங்குவார்கள்..?
காய்ந்த குச்சி கேட்டது
என்னை யார் தாங்குவார்கள்..?
காய்ந்த கிளை கேட்டது
என்னை யார் தாங்குவார்கள்..?
காய்ந்த மரம் கேட்டது
என்னை யார் தாங்குவார்கள்..?
என்றும் உங்களை நானே தாங்குவேன்
நீங்கள் தளர்ந்தாலும், வீழ்ந்தாலும்
நீங்கள் ஆடினாலும், விரைத்தாலும்
உங்களை நானே தாங்குவேன்
என்றாள் பூமித்தாய் !
என்றும்
எந்த நிலையிலும்
தாங்குவாள்
தன் அன்பு முத்தத்தால்
தளராத நெஞ்சம் கொண்ட
நம் தாய் !!