மழையாய் விழு

இந்த இரவு ஏன் நீள்கிறது
அந்த பகலும் வரத் தயங்கியதோ
உந்தன் நினைவால் புரளும் மனது
உனைக் கண்டால் அடங்கும் அதனால்
விடியும் பொழுதை கூட்டி வா உன்னோடு
அகல மறுக்கும் இரவை துரத்திட வா என்னோடு!

மழை நீரது வண்ணம் இல்லாது
பொழிகிறது எப்போதும்
விழுகிற இடம் தருவது
அதற்கொரு வண்ணம்!
கலந்திடு என்னோடு..
புது மண்ணென நான் இருப்பதால்
புது வண்ணமே கொண்டு
நீ மாறு..
எனையும் நீ மாற்று !
விதியை ஏமாற்று!
விதியையே மாற்று !

எழுதியவர் : கருணா (12-Nov-14, 12:36 pm)
Tanglish : mazaiyaai vayilu
பார்வை : 74

மேலே