பாரதியாக நானாகமாட்டேன் - சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆரிராரோ பாட்டுப்பாடும்
அன்னை யாரென்று
அறியவில்லையோ?
உச்சிமுகந்து முத்தம்பதிக்கும்
தகப்பன யாரென்று
தெரியவில்லையோ..?
எலியும் புழுவும
உனக்கு
சேவையாற்றும் செவிலியர்களோ ?
கிழிந்த தாள்களும்
உடைந்த கவிதைகளும்
உனக்கான
போர்வையோ..?
கண்டதும் காதலென்று
கன்னிக்கிழித்து இன்பம்பெற்ற
வியாக்கின அழகிகளின்
கசங்கி உள்ளாடைகளும்
எந்த எவளின்
நிர்வாணத்தையோ மேய்ந்த
கண்ட எவனகள்
அணிந்த ஆணுறைகளும்
இன்னும் இன்னும்
இந்த கேடுக்கெட்ட
மாமனிதர்கள் துப்பிய
மனச்சாட்சிக்கழிவு நிறைந்த
இந்த மாநகராட்சி
குப்பைத்தொட்டிதான்
உனக்கான
சுகமான தாலாட்டுத்தொட்டிலோ..!
அய்யகோ.....!
வெட்கத்தில் கிழியுது
எந்தன் இதயம்...!
இந்த தேசத்தின்
நாளை மன்னன்
ஒருவன்... இங்கு
சிரிக்கிறானே...!
என்னை பார்த்து
சிரிக்கிறானே...!
கேட்டுவிடுவானோ....?
வளர்ந்தப்பின்பு
என்னை எதாவது
கேட்டுவிடுவானோ....???
”எழுத்தாளனே...!
குப்பைப்போடும்
குப்பைத்தொட்டியில்
எனனைபோடும் அளவிற்கு
உன் கலாச்சாரம்
குப்பையாகிவிட்டதா என்ன..?
காம மழங்கழிக்கும்
மனித மனங்களை
தூர்வாற முடியாதோ
உன் பேனாவால்? ”
கேட்டுவிடுவானோ......!!!????
”ஆமா...........................!
எழுதுகோல் எடுத்துவிட்டா
நீயென்ன பெரிய பாரதியா....??”
நீங்கள்
கேட்பீர்கள் தானே..?
புறாக்கள் தூதுப்போன
காலத்தில் வாழ்ந்து
பாதியில் போன
அந்த பாரதியே
அனலாய் காத்திரமாய்
எழுதினார் எனும்போது...
நொடிகளில் செவிகளுக்கு
செய்திகள் கடத்திடும்
இந்த விஞ்ஞான உலகில்
அடுத்த சில
தசமங்களில் வாழம்
நான்........???
கொதிக்கும் இரத்தத்தில்
வெடிக்கும் நுரையீரலில்
துடிக்கும் இருதயத்தில்
வெகுண்டு பிறக்கும்
எரிமலை குழம்பினை
எழுத்திலேற்றி
வெறிக்கொண்டு
எழுத முடியாதோ...?
எழுதி எழுதி
மாற்றம் நிகழ்த்த இயலாதோ ??
நான் ஏன்
பாரதியாக வேண்டும்...!
சொல்லுங்கள்
ஏளனக்கார வாய்களே....!!!????
-----------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்