உன் கண்ணசைவில் இருக்கிறது

இமயத்தின் சிறப்பு - அதன்
உச்சியில் இருக்கிறது

நயாகராவின் சிறப்பு - அதன்
நீர்வீழ்ச்சியில் இருக்கிறது

பைசாநகரத்தின் சிறப்பு - அதன்
சாய்ந்த கோபுரத்தில் இருக்கிறது

பிரமிடுகளின் சிறப்பு - அதன்
கூம்புகளில் இருக்கிறது

தஞ்சையின் சிறப்பு
ராஜராஜ சோழன் கட்டிய
கோபுரத்தில் இருக்கிறது

மாமல்லபுரத்தின் சிறப்பு - அங்கு
செதுக்கப்பட்ட மௌனமான
சிற்பங்களில் மலர்ந்திருக்கிறது

தாஜ்மகாலின் சிறப்பு
ஷாஜகான் கட்டிய
காதலில் இருக்கிறது

இப்படி -
எத்தனையோ சிறப்புகள்
இவ்வுலகில் இருக்கின்றன

என்னுடைய சிறப்பு - உன்
கண்ணசைவில் இருக்கிறது.

எழுதியவர் : மா.அருள்நம்பி (13-Nov-14, 8:46 pm)
பார்வை : 142

மேலே