உயிரே உன்னை நான் மறந்துவிடுவேனா 555

என்னவளே...

மனதை மயக்கும்
மல்லி...

நிலவை மயக்கும்
அல்லி...

உறக்கமென
நீ உறங்கிவிட்டாய்...

உறக்கமின்றி
நான் இருந்தேன்...

வான் நிலவை போல...

உன் வாழ்வின் புத்தம்
புது ஆண்டு வந்தது...

அதுவே நீ பிறந்த
தினம் இன்று...

ஒலித்தது என் கைபேசி
நீ பிறந்த தினம் என்று...

உன்னை அழைத்தேன்
என்னவள் நீ என்று...

வாழ்த்துகள் நான்
சொல்ல...

புன்னகையோடு
முகம் மலர்ந்தாய்...

நிலவுக்கு காத்திருந்த
அல்லியை போல...

உன் உதய நாளை
மறந்துவிடுவேனா...

என் உயிரே உன்னை
நான் மறந்துவிடுவேனா...

வாழ்த்துகள் சொல்ல
தேடி வருவேன்...

வான் நிலவாக
உன் வாசல் தேடி...

இனிய பிறந்த நாள்
வாழ்த்துகள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Nov-14, 8:50 pm)
பார்வை : 457

மேலே